குடிவரவு - குடியகழ்வு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நைஜீரிய பிரஜைகளை அரச செலவில், அவர்களது நாட்டுக்கு அனுப்பிவைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதி தொடர்பில் இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு, அதிக நிதிஒதுக்கீடு காரணமாக அனுமதி கிடைக்கப்பெறவில்லை என அதன் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தடுத்து வைக்கப்பட்டுள்ள நைஜீரிய பிரஜைகள் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், அவர்களில் அதிகளவானவர்கள் நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த 111 நைஜீரிய பிரஜைகளில் 09 பேர் கடந்த 05ஆம் திகதியாகும் போது தப்பிச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தப்பிச்சென்றவர்கள் தொடர்பில் பொலிஸ், புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகழ்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Tamil

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.