அடுத்த மோடியான யோகி ஆட்சி செய்யும் உத்திர பிரதேசத்தில் பல்வேறு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் 20 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை வைத்து சிறு கடைகளில் விற்கப்படுவதாக அல் ஜசீரா இணையம் மேற்கொண்ட ஆபரேசனில் தெரிய வந்துள்ளது.

தாங்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டுவதற்காக எடுக்கப்படும் இத்தகைய வீடியோக்கள் குற்றவாளிகள் மூலம் நேரடியாகவோ அல்லது ரிப்பேர் ஆன செல்ஃபோன்களை சரி செய்ய கொடுக்கப்படும் கடைக்காரர்களால் திருடப்பட்டோ சிறு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வீடியோக்கள் உள்ளூர்க்காரர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய வீடியோக்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் முகங்கள் கூட மறைக்கப்படாமல் இருப்பதாக அல் ஜசீரா தெரிவித்திருக்கிறது.

உள்ளூரில் ஒருவர் மூலம் அங்கிருக்கும் கடைகளில் 'Local film' என்று அழைக்கப்படும் பாலியல் வன்புணர்வு வீடியோக்களை வாங்கி ஆய்வு செய்ததாக அல் ஜசீரா கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அரசியல்வாதிகள் சிலருக்கு தெரிந்திருக்கும் இந்த விற்பனை, காவல்துறையினருக்கு தெரியவில்லை.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களில் யாராவது அதை மீறி இயல்பாக வாழ்ந்தால் இத்தகைய வீடியோ விற்பனைகள் அவர்களை இன்னும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.

தாங்கள் சேகரித்த வீடியோக்களை இந்தியாவில் செயல்படும் பெண்கள் நல, மனித உரிமை அமைப்புகளில் புகாராக பதிவு செய்திருப்பதாக அல் ஜசீரா தெரிவித்திருக்கிறது.

ஆக்சிஜன் இல்லாமல் குழந்தை ,கள் உயிரிழப்பு, சத்துணவில் சப்பாத்திக்கு உப்பு, ஒரு லிட்டர் பாலில் அதீத தண்ணீர் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பது, ஆளுங்கட்சி எம்எல்ஏ தனது சகாக்களுடன் மைனர் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தது, அவரது தந்தையை கொலை செய்ததுடன் அவரையும் குடும்பத்துடன் கொல்ல முயற்சித்தது, மாட்டுப் படுகொலைகள் என்று ஒட்டுமொத்த குற்ற சம்பவங்களின் கேந்திரமாக இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உருவாகியிருக்கிறது.

Abul Hassan Raja

https://www.aljazeera.com/indepth/features/2016/10/dark-trade-rape-videos-sale-india-161023124250022.html?fbclid=IwAR3h-Wu6LFq2KTQVEeBLGbz1s2A66QwKrpvpDA0v2nvFO2Pmn_gEUXTBxPY

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.