அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து " வௌ்ளை வேன் " சம்பவம் தொடர்பில் வௌிப்படுத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அவர்கள் 72 மணித்தியால தடுப்புக்காவலில் விசாரிக்கப்படுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த இருவரும் வௌ்ளை வேன்களில் நபர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வௌிப்படுத்தியிருந்தனர்.

குறித்த அறிவிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று முன்தினம் இந்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்தது.

என்டனி டக்ளஸ் பெர்ணான்டோ மற்றும் அத்துல சஞ்சீவ மதநாயக்க என்ற சந்தேகநபர்கள் இருவரும் குறித்த ஊடக சந்திப்பில் கொலை, காணாமல் ஆக்கப்பட்டோர், கடத்தல் மற்றும் கொள்ளை உள்ளிட்ட சம்பவம் தொடர்பில் வௌிப்படுத்தியிருந்தனர்.

குறித்த அறிவிப்பு தொடர்பில் நீண்ட விசாரணைகளை மேற்கொண்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நாளை (15) நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

AdaDerana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.