ஜனாதிபதித் தேர்தல் முடிவின் பின்னரான முஸ்லிம் அரசியல் சோபை இழந்து போயிருப்பதான, பிம்பம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதாவுல்லாவோடு முஸ்லிம் சமூகம் அள்ளுண்டு போக வேண்டும்.என்றும், ஜனாதிபதி திடீரென எடுக்கும் தீர்மானங்கள் இந் நாட்டை சிங்கப்பூராக மாற்ற போகிறது. எனவே அரசாங்கத்தின் எடுபிடியாக உடனே மாறிவிட வேண்டும் என்றும் ஆங்காங்கே ஓசைகள் எழுப்பபடுகிறது.

உண்மையில் இந்த வெற்றியில் அரசாங்கம் உறுதியான நம்பிக்கையில் இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு கிடைத்த அனுகூலம் பொதுத் தேர்தலில் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறார்கள். இது போக ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள மேட்டுக்குடியினர் தமக்கு தாமே விளைவித்துக் கொண்ட தீங்கில் இருந்து வெளியே வரவும் முயற்சிக்கின்றனர்.

சில முஸ்லிம் பிரதிநிதிகள் கோத்தபாயவுக்கு சிக்னலை கொடுத்தாலும், வரும் பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவது என்ற முடிவில் இருந்தால் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் என்ற கூற்று சற்று யோசிக்க வைத்திருப்பதையும் அவதானிக்கலாம்.

எழுச்சியுடன் கிட்டத்தட்ட 62 வீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டிய ஜனாதிபதி சந்திரிக்கா ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறிய நிகழ்வும் இந் நாட்டு அரசியலில் இடம் பெற்றுள்ளது. எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதெல்லாம் வெறும் கற்பனையே தவிர வேறில்லை. இல்லாத இஸ்லாமிய தீவிர வாதத்தை ஒழிக்க பில்லியன் கணக்கில் வாங்கப்படும் உதவிகளுக்கு கணக்கு காட்ட முஸ்லிம் பகுதிகளில் காணப்படும். குப்பைகளை அகற்றாமல் இருக்கலாமே தவிர வேறு ஒன்றையும் செய்ய முடியாது.

இந்த வெற்றியில் பங்களிப்பு செய்த மற்றுமொரு காரணியான, "சாசனத்தை பாதுகாக்க பௌத்தர்களே ஒன்று திரளுங்கள்" என்ற கோசமும் பொதுத் தேர்தலில் எடுபடாது. எனவே முஸ்லிம் அரசியல் முடிந்தது என்று  அச்சப்படவோ, எங்களது அடையாளங்களை அழித்துக் கொள்ளவோ யாரும் அவசரப்பட வேண்டியதில்லை.

கிழக்கில் அதிகாரத்தை தம் வசம்  வைத்திருந்த சில அரசியல் வாதிகளின் அச்சம், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதை போன்றுள்ளது. பிரதேச வாதத்தை தூண்டி, அல்லது தம் எதிர்தரப்பு அரசியல் வாதிகளை கேவலப்படுத்தி, மீண்டும் ஒரு வெற்றியை தக்க வைப்பதற்கான பிரயத்தனங்களில் ஈடுபடுவதையும் அவதானிக்கலாம்.

ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் பௌத்த வாக்குகளை அதிகரிக்கும் செயற்றிட்டம் வெற்றி அளிக்குமாக இருந்தால், கோத்தபாய அரசுக்கு மேலும் சில சிக்கல்களை உருவாக்கும். சஜீதை தோற்கடித்து மாற்று தரப்பை வெற்றி பெற சூத்திரம் வகுக்க தெரிந்தவருக்கு பொதுத் தேர்தல் வியூகத்தை மாற்றவும் தெரிந்து இருக்கும் என்று நம்புவோம்.

எனவே முஸ்லிம் அரசியலை அதைரியப்படுத்தி எள்ளிநகையாடுவதை தவிர்த்து வெற்றிக்கான சூத்திரங்களை இணங்கான முயல்வோம்.எதிர்கால எம் சமூகத்தின் இருப்பு அதிகரிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திலேயே தங்கியுள்ளது.


- மீரா சமீம் BA, MA -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.