இலங்கை உயர் தொழிநுட்ப கல்லூரிகளுக்கு வருடாந்தம் இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் முப்பதாயிரம் வரை அதிகரிக்க எண்ணியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் யாழ்.உயர் தொழில்நுட்பக் கல்லூரிக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால இலங்கை முழுவதுமுள்ள 19 மேற்பட்ட தொழினுட்ப கல்லூரிகளுக்கு இதுவரை பத்தாயிரம் வரையான மாணவர்களே உள்வாங்கப்படுகின்றனர். இதனை முப்பதாயிரம் வரை அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கான நிதி ஒதிக்கீட்டை செய்வதற்கும் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம் தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து இந்த நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் கற்கை நெறிகளை நம்பிக்கையுடம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் எதிர்காலத்தில் உயர் தொழினுட்ப கல்லூரிகளுகளுடாக வழங்கப்படும் கற்கை நெறிகளில் பலவற்றை தெரிவு செய்து அவற்றிற்கு பட்டம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக எதிர்வரும் மூன்று வருடங்களில் ஒரு மூலோபாய மேம்பாட்டு திட்டத்தை செயற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த கண்காணிப்பு விஜயத்தில் அமைச்சர் வவுனியா மற்றும் அனுராதபுரம் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களையும் பார்வையிட்டார்.

இதன்போது அந்த நிறுவனங்களின் கல்வி செயற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது.

Source

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.