கஹட்டோவிட்ட Wonder Kids பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் கஹட்டோவிட்ட நெலும்பொகுண விளையாட்டு மைதானத்தில் சென்ற சனிக்கிழமை (30) நடைபெற்றது. 

Sun, Moon, Star ஆகிய இல்லங்களுக்கிடையில் போட்டி நிகழ்ச்சிகள் மிகவும் விறுவிறுப்பான முறையில் நடைபெற்றன. பகல் நேரத்தில் அடை மழை குறுக்கிட்ட போதும் ஆசிரியைகளினதும், பெற்றோர்களினதும் விடா முயற்சியினாலும், பாலர்களின் ஆர்வத்தினாலும் போட்டி நிகழ்ச்சிகள் முழுமையாக நடைபெற்று முடிந்தமை சிறப்பம்சமாகும்.

நிகழ்ச்சிகளின் முடிவில் மூன்று இல்லங்களுக்கும் சம புள்ளிகள் வழங்கப்பட்டதுடன், கடைசி வரை மத்தியஸ்தர்களதும் வர்ணனையாளர்களான ஆசிரியர் இக்பால் நாஸர் மற்றும் அஜ்மல் ஆகியோர் தமது பங்களிப்புகளை சிறப்பாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச சமூக சேவகர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ் JP மற்றும் விசேட அதிதியாக பிரதேச SLPP அமைப்பாளர் நஸீர் உள்ளிட்ட பிரமுகர்கள், பெற்றோர்கள், ஊர்மக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)










கருத்துரையிடுக

Blogger இயக்குவது.