இந்த ஆண்டு நாடு தழுவிய ரீதியில் ஒவ்வெரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இருந்தும் தெரிவு செய்யப்படும் வறுமைக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு வீடு அமைப்பதற்காக நிதி வழங்கப்படவுள்ளது.

600,000 ரூபா நிதியானது நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலான தவணைக் கொடுப்பவாக வழங்கப்படவுள்ளதுடன். இத் திட்டத்தில் 14,022 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பேண்தகு அபிவிருத்தியை இலக்கையில் பூரத்தி செய்யும் நோக்கில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான அமைச்சவைத் தீர்மானம் பின்வருமாறு:

02. ´கமட்ட கெயக் - ரட்டட் ஹெடக்´ என்ற திட்டத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் சிறந்த வசதிகளைக் கொண்ட வீடு ஒன்று

நாட்டை மேம்படுத்தும் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் அனைத்து குடும்பங்களுக்கும் சிறந்த வசதிகளைக் கொண்ட வீட்டில் வாழ்வதற்கு வசதி செய்வதன் மூலம் பேண்தகு அபிவிருத்தியை இலக்கையில் பூரத்தி செய்யும் நோக்கில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சரினால் ´கமட்ட கெயக் - ரட்டட் ஹெடக்´ என்ற வேலைத்திட்டத்தை விரைவாகவும் பேண்தகு அபிவிருத்தி வேலைத்திடம் என்ற ரீதியிலும் 2020 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம் மற்றும் அரச அதிகாரிகளின் இணைப்புடனும் கிராமிய மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், அரச அதிகாரிகள் சிவில் அமைப்பு மற்றும் சமூகத்தின் நலனைக்கொண்ட சமூக குழுக்கள் ஊடாக 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கு அமைவாக இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் முக்கியத்துவம் வழங்கிய வகையில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்காக நிர்மாணிப்பதற்கு அல்லது மேம்படுத்துவதற்கு 6 இலட்சம் ரூபா (06) நிதி உதவி நிர்மாண பணிகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலான தவணைக் கொடுப்பவாக வழங்கி 14,022 வீடுகளை நிர்மாணிப்பதற்கான மானியத்தை வழங்குவதற்காக பிரதமர் மற்றும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.