பொத்துவில் சிறியா என்று சொல்லப்படுகின்ற ஹிஜ்ரா நகரில்,
Dubai நாட்டின் நிதி உதவியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களின் முழு முயற்சியினால் வசதியற்றோர்களுக்காக நிர்மானிக்கப்பட்ட 50 வீடுகள் பற்றி ஓர் பார்வை.

Dubai நாட்டின் sheikh zayed bin sultan  Al nahyan அவர்களின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட குறித்த 50 வீடுகளுக்குமாக குடிநீர் தேங்கிகள் அமைக்கப்பட்டிருக்கிறது அந்த குடிநீர் தேங்கிக்கும் தேங்கியில் இருந்து வீடுகளுக்குமான இணைப்புகளுக்கு பணம் ரூபா 5000 வசூலிப்பதாக குறித்த வீடுகளில் வாழ்ந்து வருகின்ற ஏழை மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

 அது பற்றி இந்த நிதியுதவி வழங்கியவர்களின் கவனத்திற்கும் அ.இ.ம.கா.தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களினதும் பிரதேச செயலகம் மற்றும் இது சார்ந்த அதிகாரிகளினதும் கவனத்திற்கும் இத் தகவலை தருகிறேன்

#இது முறையான அறவீடுதானா?

#ஏன் தேங்கிகளுக்கு நீர் நிரப்பும் வசதிகளை குறித்த நிறுவனம் செய்து கொடுக்கவில்லையா?

# கிணறுகள் இருந்தும் தேங்கிகளை நிரப்புவதில் என்ன சிரமம் இருக்கிறது?

#கினற்றுக்கான நீர் மோட்டர்கள்  எங்கே?

#குளாய்கள் எங்கே?

குறிப்பு வீடுகள் வழங்கிய காலம் தொட்டு இதுவரையிலும் மக்கள் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர்.
கிணறுகள் இருந்தும் மக்களை அவதிப்பட வைத்து பணம் வசூலிப்பது பற்றி அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தவும்.

ரூபா 5000 பெற்றுக்கொள்வது பற்றி கவனம் செலுத்தவும்
இந்த சம்பவம் மட்டுமல்லாமல் குறித்த வீடுகளிக்காக அமைக்கப்பட்ட வீதிகளிலும் ஆகப்பெரிய மோசட்கள் இடம்பெற்றிருக்கிறது என்பதனையும் இவ்விடத்தில் தெரிவிக்கின்றேன்.

(பிர்தவ்ஸ் - கல்முனை)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.