2025ல் இந்தியாவில் நாங்கள் 10 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கி இருப்போம் என்று அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா வருகை

இந்த நிலையில் இந்தியா வந்த ஜெஃப் பெஸோஸ், கடந்த புதன் கிழமை இந்தியாவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார். 10 மில்லியன் பேர் இதனால் பயன் அடைவார்கள். சிறு, குறு தொழில் இதனால் வளரும். இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகம் இதனால் புதிய உயரம் தொடும் என்று ஜெஃப் பெஸோஸ் குறிப்பிட்டார்.
ஆனால்

ஆனால் என்ன

ஆனால் ஜெஃப் பெஸோஸின் இந்த அறிவிப்பை மத்திய அரசு சந்தோசமாக ஏற்கவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்த முதலீடு காரணமாக இந்தியாவிற்கு பெரிய பலன் கிடையாது. இதன் மூலம் இந்தியாவிற்கு ஜெஃப் பெஸோஸ் சேவை எதையும் செய்யவில்லை. இதனால் இந்தியாவிற்கு நஷ்டம் ஏற்பட கூட வாய்ப்புள்ளது என்று கூறினார்.

மிக மோசம்

இவரின் இந்த பேச்சு கார்ப்ரேட் நிறுவனங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவ்வளவு பெரிய முதலீட்டை ஈகோ காரணமாக இந்தியா இப்படி நடத்த கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அமேசான் முதலீடு காரணமாக இந்தியாவில் 2025க்குள் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.
வேலை

வேலைவாய்ப்புகள்

பல்வேறு துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஏற்கனவே அமேசான் மூலம் 7 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். 2013ல் இருந்து அமேசான் மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. 2025ல் நாங்கள் 10 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி இருப்போம், என்று ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.

(Oneindia)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.