குருநாகல் வைத்தியசாலையின் பிரசவ வைத்தியர் ஷாபி அவர்கள் இதுவரை கடமைக்கு மீள சமூகமளிக்கவில்லையென அரசாங்க சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பணித் தடையில் இருக்கும் தன்னை மீண்டும் பணியில் இணைக்க வைத்தியர் ஷாபி அவர்கள் அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார கமிட்டிக்கு, சுகாதார அமைச்சு சார்பாக வேண்டுகோள் விடுத்திருந்ததாக அதன் செயலாளர் தயா செனரத் தெரிவித்திருந்தார்.

என்றாலும் வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை நடாத்தி அதன் அறிக்கையை அரச சேவைகள் ஆணைக்குழுவின் சுகாதார கமிட்டிக்கு ஒப்படைக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள போதும் இதுவரை அது கிடைக்கவில்லை என அரச சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அது கிடைக்கும் வரை வைத்தியர் ஷாபியின் சேவை மீள் இணைப்பு சம்பந்தமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாதுள்ளதாக ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

இதேவேளை, சென்ற தினங்களில் வைத்தியர் ஷாபியை சேவையிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் தயா செனரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.