அமெரிக்க விமானம் பிரவேசித்தால் திரும்பி செல்லாதென்று ஈரான் கூறுவது உண்மையா ? ஈரான் வைத்துள்ள பொறி என்ன ?

ஒரு இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடாத்திவிட்டு எவ்வாறு தப்பித்து செல்லலாம் என்றே கெரில்லா போராளிகள் முதலில் திட்டமிடுவார்கள்.

அவ்வாறு தப்பிச்செல்ல வாய்பில்லாத தளங்களை தாக்குவதன் மூலம் போராளிகளை இழக்க முற்படமாட்டார்கள். இது யுத்த தந்திரங்களில் ஒன்று.

அமெரிக்கா தாக்குதல் நடாத்தினால், தாக்கப்படுகின்ற நாடுகள் தற்காப்பு தாக்குதலில் மாத்திரமே ஈடுபடுவது வழமை. ஆனால் ஈரானானது அமெரிக்காவின் இலக்குகளை தேடிச்சென்று தாக்குதல் நடாத்தியுள்ளது. இது அமெரிக்கா என்ற வல்லரசுக்கு தலைகுணிவை ஏற்படுத்தியுள்ளது.

அப்படியிருந்தும் தனது அதி நவீன F35 விமானங்கள் மூலமும், சக்திவாய்ந்த குண்டுகள் மூலமும் உலகை அச்சுறுத்தி வருகின்ற அமெரிக்காவானது ஈரானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தாமல் வழமைக்கு மாறாக சமாதானம் பேசிக்கொண்டு பின்வாங்கியது ஏன் ?

ஈரான் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக முறுகல் நிலை இருந்தாலும் முதலில் ஈரான் மீது வலிந்து கைவைத்தது அமெரிக்காதான். அவ்வாறாயின் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு வழங்கியிருந்தால் அமெரிக்காவின் இமேஜ் காப்பாற்றப்பட்டிருக்கும்.

ஈரான் மிகவும் பெரிய நிலப்பரப்பைக்கொண்ட நாடு. அது ஈராக், ஆப்கானிஸ்தான் போன்றதல்ல. இலங்கையின் நிலப்பரப்பை போன்று 25 மடங்கு அதிகமானது ஈரானின் நிலப்பரப்பாகும்.

ஈரானின் எல்லை நாடுகளாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அசார்பைஜான், துர்க்மேனிஸ்தான், ஆர்மேனியா, துருக்கி, ஈராக் ஆகிய எட்டு நாடுகள் உள்ளது.

குறித்த அயல்நாடுகள் அனைத்தும் ஈரானுடன் நல்ல உறவில் உள்ளது. அதாவது ஈரானை தாக்குவதற்கு அமெரிக்காவுக்கு தளம் வழங்குவதற்கோ, தனது யுத்த விமானங்களுக்கு பெற்றோல் நிரப்புவதற்கோ எந்தவொரு நாடும் முன்வராது.

அத்துடன் ஈரானின் இராணுவ கேந்திர நிலைகள், பிரதான ஏவுகணை தளங்கள், கட்டளை மைய்யங்கள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதோடு ஏனைய விமான எதிர்ப்பு நிலைகள், சிறியளவிலான விமானப்படை தளங்கள், குறுந்தூர ஏவுகணை தளங்கள் என இராணுவ முப்படை நிலைகளும் ஈரானின் எல்லையை சுற்றிவர நூற்றுக்கணக்கில் அமைக்கப்பட்டுள்ளது. .

ஈரானின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளங்களை F35 விமானத்தின் மூலம் தாக்கியழிப்பதென்றால் ஈரான் நாட்டுக்குள் ஆகக்குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு மேல் பறந்துசென்று தாக்குதல் நடாத்விட்டு திரும்பி வரவேண்டும்.

தாக்குதல் நடாத்த விமானத்தில் பயணிப்பதற்கு ஆகக்குறைந்தது ஒரு மணி நேரம் தேவைப்பட்டால், தாக்கிவிட்டு திரும்பி வருவதற்கும் அதே நேரம் தேவைப்படும், மொத்தமாக இரண்டு மணி நேரம் ஈரானின் வான்பரப்பில் அமெரிக்க விமானம் பயணிக்க வேண்டியிருக்கும்.

அவ்வாறு இரண்டு மணி நேரம் பயணிக்கும் வரைக்கும் ஈரானின் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும், விமானப்படையினர்களும் சும்மா பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

நாட்டுக்குள் எதிரி விமானம் உள்நுழைந்தால் அதனை விரட்டி சென்று சுற்றிவளைத்து விமானத்தை கைப்பேற்றும் திறன் ஈரானிடம் உள்ளது.

உலகிலேயே அதி நவீன விமானமாக கருதப்படுகின்ற தனது F35 விமான தொழில்நுட்பம் சீனா, ரஷ்யா உற்பட எந்தவொரு எதிரி நாட்டுக்கும் கிடைத்துவிடக் கூடாதென்பதில் அமெரிக்கா விழிப்பாக இருக்கின்றது.

எனவேதான் ஈரான் வைத்திருக்கின்ற பொறிக்குள் தான் சிக்கிவிடக்கூடாது என்றும் அவ்வாறு சிக்கினால் அது உலகளவில் அமெரிக்காவுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருதியதனாலேயே F35 விமானம் மூலம் ஈரானின் கேந்திர நிலைகள் மீது தாக்குதல் நடத்தாமல் அமெரிக்கா பின்வாங்கியது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.