ஜப்பானில் இளமையை எட்டிய இளைஞர்களுக்காக ஒரு மாபெரும் விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக 20 வயதானவர்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். 

பதின்ம வயதை கொண்டாடும் ஜப்பானியர்கள்

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இரண்டாம் திங்கள் கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது.இந்த விழாவிற்காக டோக்கியோவின் டிஸ்னி லேண்டில் பலர் கூடுகின்றனர்.
இந்த விழாவில் கலந்துகொள்ளும் பெண்கள் கிமோனோஸ் என்ற பாரம்பரிய ஆடையை அணிகின்றனர். ஆண்களும் அந்நாட்டின் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொள்கின்றனர்.
1876 முதல் ஜப்பானில் சட்டபூர்வ வயதாக 20 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022 முதல் அது 18 ஆகவுள்ளது.
ஜப்பானில் 2022 முதல் துவக்கத்தில் இருந்து ஜப்பானிய இணையர்கள் திருமணம் செய்ய இனி பெற்றோரின் ஒப்புதல் தேவையில்லை.

தற்போது ஜப்பானில் 18 வயதான ஆண்களும் 16 வயதான பெண்களும் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளலாம். 
2015ம் ஆண்டு முதல் ஜப்பானில் 18 முதல் 20 வயதானவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மது அருந்துவதற்கு, புகைபிடித்தலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.
பதின்ம வயதை கொண்டாடும் ஜப்பானியர்கள் பதின்ம வயதை கொண்டாடும் ஜப்பானியர்கள் பதின்ம வயதை கொண்டாடும் ஜப்பானியர்கள்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.