ஒரு கிலோகிராம் 300 முதல் 400 ரூபாய் வரையில் அதிகரித்திருந்த மரக்கறிகளின் விலை, தற்போது படிப்படியாகக் குறைவடைந்து வருகின்றது.
இன்னும் இரண்டு வாரங்களுக்குள், இந்த மரக்கறிகளின் விலைகள் குறைவடையுமென்று, ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
போஞ்சி, பீட், லீக்ஸ் ஆகிய மரக்கறிகள் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலைகள் குறைவடையும் என்று, அந்நிறுவனத்தின் பணிப்பாளர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து சந்தைக்குக் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில், மரக்கறிகளின் விலைகள், 30 சதவீதமளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலையும், ஓரளவு குறைவடைந்துள்ளதாக, மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilmirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.