கஹடோவிடையில் அமைந்திருந்த கூட்டுறவு கடை மற்றும் கிராமிய வங்கியை உள்ளடக்கிய இல. 55 கஹடோவிட கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல் கஹடோவிட MLSC மண்டபத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இத்தேர்தலில் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினரும் கஹடோவிட வட்டார ஐ.தே.க. அமைப்பாளருமான நஜீம் J.P. மற்றும் UPC கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் பிரதேச உறுப்பினருமான K.A.நாஸர் J.P. தலைமையிலான ஒன்பது வேட்பாளர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கஹடோவிட வட்டார  பிரதேச சபை வேட்பாளர்களான துமிந்த சேனாதீர மற்றும்  M.H.M.நஸீர் ஆகியோரின்  ஆதரவிலான ஏழு வேட்பாளர்களும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.


நஜீம் J.P. தலைமையிலான வேட்பாளர் அணியினருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரமுகர்களான M.K.M.இக்ரமுல்லாஹ் மற்றும் அல்ஹாஜ் ருஷ்தி உஸ்மான் ஆகியோரும் ஆதரவு அளிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தகவல் - நாஸர் JP


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.