ஈரான் தாக்குதல் நடாத்தியும் அமெரிக்கா திருப்பி தாக்காதது ஏன் ? அமெரிக்காவின் நண்பர்கள் எங்கே ?

உண்மையான வீரர்கள் தனிமையாக சென்று எதிரியுடன் சண்டை செய்வார்கள். அந்த சண்டையானது நியாயமானதாக இருக்கும். ஆனால் வெளியே வீரனாகவும், உள்ளே கோழையாகவும் இருப்பவர்கள் தனியாக சென்று சண்டை செய்ய தயங்குவார்கள்.

இவ்வாறான கோழைகள் தனது நண்பர்களையும் அழைத்துக்கொண்டு படையோடு சென்று அப்பாவியை தாக்கிவிட்டு தன்னை ஓர் வீரனாக காண்பித்துக்கொண்டு உண்மையான வீரர்களை மிரட்ட முற்படுவார்கள்.

அமெரிக்காவின் நிலையும் இதுதான். அமெரிக்கா எப்போதும் தனது எதிரி நாடுகள் மீது தனியாக சென்று யுத்தம் செய்ததில்லை. பிரிட்டன், பிரான்ஸ் உற்பட ஐரோப்பிய நாடுகள், மற்றும் மத்தியகிழக்கில் உள்ள தனது அரபு நண்பர்களையும்
அழைத்துக்கொண்டே போருக்கு செல்வது வழக்கம்.

1990 இல் குவைத்தை ஈராக் ஆக்கிரமித்தபோது சுமார் நாற்பது நாடுகளுடன் சென்று ஈராக்குக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்து குவைத்தை மீட்டது. அதுபோல் 2001 இல் ஆப்கானிஸ்தானிலும், 2003 இல் சதாம் ஹுசைனுக்கு எதிராகவும் இதேபோன்று சுமார் 33 நாடுகளுடன் சென்று அமெரிக்கா போர் தொடுத்து தன்னை வீரனாக காண்பித்தது.

அப்போது ஈராக்குக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் உலகில் நண்பர்கள் இருக்கவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், பொருளாதார தடையினால் பலமிழந்த நிலையிலும் இவ்விரு நாடுகளும் காணப்பட்டது.

ஆனால் ஈரானின் நிலை அப்படியல்ல. ஈரானுக்கு உலகில் நண்பர்கள் அதிகம். அத்துடன் இஸ்லாமிய நாடுகளில் அதிக பலமிக்கதும், வல்லரசு என்று கூறுகின்ற நிலையில் ஈரான் உள்ளது.

வெளிநாடுகளை நம்பியிருக்காமல் தனது சொந்த முயற்சியினால் முன்னேறியதுடன், ஆயுத உற்பத்தி மற்று குறுந்தூர, நீண்டதூர ஏவுகணைகளை பரிசோதனை செய்து இஸ்ரேலுக்கு அச்சத்தை வழங்கிவருகின்ற நாடுதான் ஈரான்.

நேற்று அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடாத்தியது. ஆனால் தனக்கு கட்டுப்பட மறுக்கின்ற நாடுகளை மிரட்டுகின்ற அமெரிக்கா, ஈரானின் தாக்குதலுக்கு எதிராக பதில் தாக்குதல் நடாத்தவுமில்லை, போர் பிரகடனம் செய்யவுமில்லை.

எடுத்ததுக்கெல்லாம் அமெரிக்காவுடன் சென்று போர் செய்கின்ற நிலையில் ஐரோப்பிய நாடுகள் இப்போது இல்லை. ஐரோப்பாவிலும் ஈரானுக்கு நண்பர்கள் அதிகம். அதனால் ஈரானுக்கெதிராக போர் செய்ய விரும்பாது பல நாடுகள் பின்வாங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஈராக்கிய நிலைகளில் ஈரான் தாக்குதல் நடத்திய உடனேயே ஈராக்கில் நிலைகொண்டிருந்த ஜேர்மன், பிலிப்பைன்ஸ், டென்மார்க் ஆகிய நாட்டு படைகள் ஜோர்தான் வழியாகவும், குவைத் வழியாகவும் ஈராக்கைவிட்டு வெளியேறியதுடன், இன்னும் பல நாட்டு படைகள் ஈராக்கிலிருந்து வெளியேற தயார் நிலையில் உள்ளது.

எனவேதான், தான் கைவிடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையை உணர்ந்த அமெரிக்கா ஈரானுக்கு எதிராக போர் பிரகடம் செய்யவோ. அச்சுறுத்தவோ, திருப்பி தாக்குதல் நடாத்தவோ முற்பவில்லை.

முன்புபோன்று தனது நண்பர்கள் அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருந்தால், இப்போது அமெரிக்காவின் நிலைப்பாடு வேறுவிதமாக இருந்திருக்கும். கள நிலவரமும் மாற்றமடைந்திருக்கும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.