ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுவன் மற்றும் 7 மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 733 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் நாடிபோரா பகுதியைச் சேர்ந்த ஒரு வயதான நபரின் பேரக்குழந்தைகளான 8 வயது சிறுவன் மற்றும் ஏழு மாதக் குழந்தைக்கு  கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 16 ஆம் தேதி சவூதி அரேபியாவிலிருந்து திரும்பி வந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து அவரது மனைவி, மகன்கள், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்பட 14 பேர், ஜே.எல்.என்.எம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதில் வியாழக்கிழமை வந்த அறிக்கையின் அடிப்படையில் இரண்டு குழந்தைகளுக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜே.எல்.என்.எம் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜாகிர் உசேன் தெரிவித்தார்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மிக இளம் வயது நபராக இந்த 8 மாதக் குழந்தை இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோருக்கு கரோனா அறிகுறிகள் தென்படவில்லை என்றும் பரிசோதனை முடிவுகள் வந்தபிறகே அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா என உறுதிசெய்ய முடியும் என்றும் கூறினார்.

மேலும், கரோனாவால் உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்த 75 நபர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் குடும்ப உறுப்பினர்கள் 11 பேருக்கு கொரோனா இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை மருத்துவமனை விடுவித்தது தொடர்பாகவும் அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

31 பேர் கைது

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விதிமுறைகளை மீறி வெளியில் நடமாடிய 14 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் 14 பேரும், காண்டர்பால் மாவட்டத்தில் 3 பேரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.