கடைகளும் நகரங்களும்
தூங்கிவிட்டன
பாதங்களால்
நிரைந்நிருந்த பாதைகள்
பாழாகிவிட்டன
நீடிக்கின்ற நிசப்தம்
மயானத்தை
நினைவுபடுத்துகிறது

இறந்து போனவர் யார்..
இறக்கப் போபவர் யார்..
தப்பிக்கப் போபவர் யார்?
தெரியாமல் தவிக்கிறது
மனித மனம்

அடைத்து வைத்து
பராமரிக்கப்படும் விலங்குகளாய்
மனிதர்கள்

தனிமையாக இருந்து
தப்பித்துக்கொள் என்று
அரசு அறிவிப்பு

வசதிவாய்ப்புகளும் பெருமைவாதமும்
தோற்றுப்போய்
தன்னை காக்கும்
காவலனாய்
தனிமையும் - தானுமாய் நிற்கிறது
உலகம்

அஸ்ஹர் அன்ஸார் 
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.