-எஸ்.நிதர்ஷன்
நீர்கொழும்பில், கொரோனோ வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இடம் முற்றுகையிடப்பட்டு, அவர் கலந்துகொண்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம் நகரை அண்மித்த ஐந்து சந்திப் பகுதியிலேயே, குறித்த நபர் தங்கியிருந்தார். இந்நிலையில், அந்தப் பகுதி முழுவதும் இன்று (31) காலை முதல் முற்றுகையிடப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அங்குள்ள பலரையும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நீர்கொழும்பில், நேற்று (30) இரவு ஒருவர் உயிரிழந்திருந்தார். இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே, இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.