~ வேறொன்றும் வேண்டாம்!
கொரோனாவைத் தோற்கடிப்போம்! ~



ஆரம்பத்தில் சீனர்கள் மீது வெறுப்புக் கொண்டோம்!

பிறகு, வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியோரை வெறுத்தோம்!

அதன் பிறகு, தனிமைப்படுத்தல் நிலையத்தை எங்கள் ஊருக்கு அருகில் அமைக்க வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்தோம்!

அடுத்ததாக, சில இடங்களில் சுகாதார ஊழியர்களை பொது போக்குவரத்து வாகனங்களில் ஏற்றுவதைத் தவிர்ந்தோம்!

தற்போது இனத்தின் அடிப்படையில், சமயம், பிரதேசம் போன்றவற்றின் அடிப்படையில் வெறுக்கும் தன்மை ஆரம்பமாகியுள்ளது!

அதனை ஊதிப் பெருப்பித்து பரவச் செய்யவும் தூண்டப்படுகின்றது!

எம்மைக் கூறுகளாகக் கிழித்திருக்கும் இந்த சுயநலம் பிடித்த, இனவாத, மதவாத, பிரதேசவாத, குழுவாத வைரஸ், எமது நாட்டை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பதற்காக நடத்தும் போரட்டத்தை பலவீனப்படுத்துகின்றது. வேகத்தை முறிக்கின்றது!

சுனாமியின் போது மக்களிடம் எழுந்த எழுச்சி, இன்னும் எமது சமூகத்தில் எழவில்லை.

பல வருடங்களாக சமூகத்தை கூறுபோட்ட இந்த வைரஸ், எமது சமூகத்தை மிக மோசமாகப் பலவீனமடையச் செய்திருக்கின்றது.

எமக்கு தற்போது தேவை, கொரோனாவை வெற்றிகொள்ளுதல்!

எமக்குத் தேவை மக்களின் ஒற்றுமை!

எமக்குத் தேவை மனிதநேயம். ஓரணி நின்று தொற்றைத் தோல்வியுறச் செய்யும் கூட்டுப் பணிகள்!

ஆகவே, நோயாளிகளின் படங்களைப் பிரசுரிக்க வேண்டாம்! மரணித்தவர்களின் படங்களைப் பகிர வேண்டாம்!

இனவாதம், மதவாதம், வெளிநாட்டவரை ஒதுக்குதல் வேண்டாம்!

வேறொன்றும் வேண்டாம்!
கொரோனாவைத் தோற்கடிப்போம்!

-பிமல் ரத்நாயக்க-
JVP முன்னாள் எம்பி / மத்தியக் குழு உறுப்பினர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.