அஷ்ஷெய்க் ஃபளீல் (நளீமி)

இன மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆய்வுகள் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ள தற்கால சூழலில் இனங்களுக்கிடையிலான உறவுகளை வளர்க்கவும்பலப்படுத்தவும் இஸ்லாம் எத்தகைய வழிகாட்டல்களை முன்வைக்கிறது என்பது பற்றிய ஆய்வுகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.குறிப்பாக சுனாமி,கொரோன வைரஸ் தாக்கம் போன்ற அனர்த்த சூழ்நிலைகள் வரும்போது இவ்வாறான உதவிகளை அவர்களுக்கு முஸ்லிம்கள் செய்யலாமா என்ற கேள்வியை பரரும் எழுப்புவதுண்டு.

ஆனால்,எத்தகைய சூழ்நிலையிலும் மதத்தால்சித்தாந்தத்தால் வேறுபட்டுள்ளவர்களை இஸ்லாம் சகிப்புத் தன்மையுடன் நோக்குவதுடன் மாத்திரமல்லாமல் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் நோக்கி அவர்களது அடிப்படையான தேவைகளைக் கூட நிறைவுசெய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்திருப்பது அதன் மத சகிப்புத்தன்மைக்கும்மனிதாபிமான அணுகுமுறைக்குமான சிறந்த சான்றாகும்.


முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகவும்அதிகாரத்துக்குரியவர்களாகவும் இருந்த நாடுகளில் மாற்று மதத்தவர் (திம்மீ) களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் பற்றியே இதுகாலவரை அதிகமான அறிஞர்கள் எழுதியும் பேசியும் வந்தனர். ஆனால்தற்கால சூழலில் சுமார் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் பின்தங்கியவர்களாகவும் வாழுவதனால் அந்த நாடுகளிலுள்ள பெரும்பான்மை இனத்தவரோடுள்ள உறவுகளை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆய்வுகளும் 'பிக்ஹுல் அகல்லியாஎன்ற பெயரில் அண்மைக்காலத்தில் இடம்பெறுகின்றன. 

இந்தவகையில்இலங்கை போன்றதொரு நாட்டில் பௌத்தஇந்துகிறிஸ்தவ சமூகங்களுடனான உறவுகளை ஷரீஆவின் வெளிச்சத்தில் நின்று செம்மைப்படுத்தும் கடமை முஸ்லிம்களுக்கிருக்கிறது.
எனவேஇந்தக் கட்டுரைநாம் பிறசமயத்தவருக்குப் பொருளாதார ரீதியான உதவிகளைச் செய்வதன் வரையறைகளையும் அவசியத் தன்மையையும் உணர்த்த எழுதப்படுகிறது.

உலக விவகாரங்களில்  பிறசமயத்தவர்களுடன் இணக்கமாகவும் அவர்களுக்கு உதவி செய்தும் பொருளாதார ரீதியில் பிற அவர்கள் பாதிக்கப்படும் சூழலில் அல்லது பிறரது தயவை அவர்கள் வேண்டும் சூழலில் அவர்களைக் கவனிப்பது முஸ்லிமின் கடமையாகும்.

ஸகாத் என்ற பங்கிலிருந்து பிறசமயத்தவர்களுக்கு வழங்கலாமா என்ற சர்ச்சை பற்றிய ஆய்வுகளுக்கு வரமுன்னால் கடமை அல்லாத ஸதகாஸகாதுல் பித்ர்உழ்ஹிய்யா போன்றவற்றிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கலாமா என்பதற்கான பதிலைக் காண விழைவோம்.


பெற்றோருக்கான உதவிகள்

ஒருவரது தாய் அல்லது தகப்பன் அல்லது இருவரும் மாற்று மதத்தவர்களாக இருப்பினும் அவர்களின் (நபகா) அடிப்படையான தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பது பணவசதி படைத்த மகனின் கடமையென்று அநேகமான சட்ட வல்லுனர்கள் கூறுகிறார்கள். 

ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்தவர்களின் ஒரு கருத்துப்படி அது கடமையல்ல என்று இருப்பினும் மத வித்தியாசமானது இக்கடமையிலிருந்து மகனை விலக்களிக்காது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும்.(1) காரணம்,
'தன் தாய் தந்தையர்களுக்கு உபகாரம் செய்யும்படியாக நாம் மனிதனுக்குக் கட்டளையிட்டிருக்கிறோம்'. (29-8) 'நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றிக் கட்டளையிட்டிருக்கிறோம்' (31:14) போன்ற வசனங்கள் பெற்றாருக்கு உபகாரம் செய்யும்படி கட்டளையிடும்போது அவர்கள் பிறசமயத்தவர்கள் அல்லது முஸ்லிம்கள் என்று பாகுபடுத்தி நோக்கும்படி கூறவில்லை. இதற்கு நல்ல உதாரணம் குர்ஆனின் 31ம் அத்தியாயத்தின் 15ம் வசனமாகும்.

ஸஅத் ஈப்னு அபீவக்காஸ்(றழி) அவர்கள் இஸ்லாத்தில் இணைந்திருந்ததை ஆட்சேபித்து அவரது காபிரான தாய்ஸஅத் அவர்கள் தனது புதிய மார்க்கத்தை விடும்வரை உண்ணாமல்பருகாமல் இருக்கப் போவதாக சபதமிட்டார். இந்த நிலையில் நபி(ஸல்) அவர்களிடம் ஸஅத் ஆலோசனை கேட்டபோது தான், 'ஆனால்நீர் எது பற்றி அறிவு பெற்றவனாக இல்லையோ அதனை இணைவைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம்.ஆனால்லோகாயத விடயங்களில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக்கொள்' (31:1) என்ற வசனம் இறங்கியது.


எனவேஇவ்வசனம் மாற்று மதத்தவர்களான பெற்றோர்களுக்கு முஸ்லிமான மகன் உதவ முடியும் என்பதைக் காட்டுகிறது. அதிலும் குறிப்பாக மகன் செல்வச் செழிப்புடன்வசதியாக வாழும் போது பெற்றார் பசியால் வாடுவதாயின் உபகாரம் செய்யாமல் கஷ்டப்படும்படியாக அவர்களை விட்டுவிட்டால் அது அவர்களைப் பெரிதும் பாதிக்கும். 'சீஎன்று கூட கூற வேண்டாம் என்று குர்ஆன் பிரஸ்தாபிப்பதாயின்இவ்வாறான கஷ்டநிலையில் பெற்றோர் வாழுவதை மகன் பார்த்துக்கொண்டிருப்பதாஎனவேதான்ஏழைகளான பெற்றோர் - அவர்கள் பிறசமயத்தவருகளாயினும் முஸ்லிம்களாயினும் அவர்களுக்கு தொழிலோஜீவனோபாயமோ இல்லாதபோது அவர்களுக்கான செலவினங்களை வழங்குவது மகனின் கடமை என அறிஞர்கள் ஏகோபித்து முடிவு செய்துள்ளனர் என ஈமாம் இப்னுல் முன்திர் கூறுகிறார்கள்.(2)


அதேபோல்மகன் பிறசமயத்தவராக இருந்து செலவைப் பெறும் வயதிலும் இருந்தால் முஸ்லிமான தகப்பன் அந்த மகனுக்காகச் செலவுகளை வழங்குவது கடமையாகும். குர்ஆனில் அல்லாஹ், 'அப்பிள்ளையின் தாய்மார்களாக இருப்பவர்களுக்கு முறைப்படி உணவும் உடையும் கொடுத்துவருவது பிள்ளையின் தகப்பன் மீது கடமையாகும்என்ற வசனத்தில் 'பிள்ளையின் தகப்பன் மீது கடமையாகும்என்ற வசனத்தில் பிள்ளையின் காரணமாகத் தாய்க்கு செலவளிப்பது கடமையென உணர்த்தப்பட்டிருக்கிறது. அப்படியாயின்அத்தகைய செலவைப் பெற தாயை விட பிள்ளை அதிகம் அருகதையானதாகும். அந்தத் தாய் அல்லது பிள்ளை காபிராக இருப்பினும் இதுதான் சட்டமாகும்.(3)


எனவேபெற்றார் காபிராக இருந்தாலும் அவர்களுக்கான செலவினங்களை வழங்குவது வசதிபடைத்த மகனுக்குக் கடமை என்பது போல் காபிராக இருக்கும் பிள்ளை வசதியற்றவனாக இருப்பின் அவனுக்குச் செலவு செய்வதும் தகப்பனின் கடமை என்பதை இதிலிருந்து புரியமுடியும்.


ஆனால்இவ்வாறு உதவியை வேண்டிநிற்போர் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்துப் போராடுவோராக இருந்தால் அவ்வுதவி வழங்கப்படலாகாது என சில இமாம்கள் கூறுவர். ஆனால்ஹனபி மத்ஹபைச் சேர்ந்த இமாம் காஸானீ அவர்கள்அவ்வாறு 'ஹர்பீகாபிர்களாக இருப்போருக்கும் செலவளிப்பது கடமையெனக் கூறுகிறார்கள்.(4)

ஆனால்ஒருவரது தாய் அல்லது தகப்பன் அல்லது மகன் மாற்றுமதத்தில் இருந்தால் அவர்களுக்குச் செலவு செய்வது கடமையில்லை என யூதகிறிஸ்தவ மதங்களின் போதனைகள் கூறுகின்றன.(5)


பெற்றார் காபிராக இருப்பினும் அவர்களுடனான சாதாரண உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதற்கு பின்வரும் சம்பவம் உதாரணமாகும். அஸ்மா(றழி) அறிவிக்கிறார்கள்: 'எனது தாய் இணைவைப்பவராக இருந்த வேளையில் (மக்காவிலிருந்து) அவர் என்னைச் சந்திக்க வந்தார். குறைசியர் முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்திருந்த காலமது. அப்போது நான் நபிகளார்(ஸல்) அவர்களிடம் போய் 'எனது தாய் என்னிடம் (ஏதோ உதவியை) எதிர்பார்த்து வந்திருக்கிறார். நான் அவரைச் சேர்ந்து நடக்கலாமா?’ என வினவினேன். அதற்கு அவர்கள் 'ஆம்உனது தாயைச் சேர்ந்து நட (உதவி ஒத்தாசைகளைச் செய்)எனக் கூறினார்கள்.'(6)


எனவேசமயத்தின் அடிப்படையிலான வேறுபாட்டைக் காரணம் காட்டி தாய் தகப்பனை ஒதுக்கத் தேவையில்லை என்பதனை இதிலிருந்து புரிய முடியும்.


காபிர்களான உறவினர்கள்

இது பெற்றாருக்குப் பிள்ளைகளும்பிள்ளைகளுக்குப் பெற்றாரும் செலவளிப்பது தொடர்பான சட்டமாயினும் ஒரு முஸ்லிம் தனது ஏனைய உறவினர்களான மாற்று மததததவர்களுக்குச் செலவளிப்பது பற்றியும் இஸ்லாத்தில் நெகிழ்ச்சியான சட்டதிட்டங்களையே காணமுடியும்.


நபிகளாரது காலத்தில் முஸ்லிகளிற் சிலர்தமது உறவினர்களான இணைவைத்து வணங்கியோருக்கு உதவி ஒத்தாசைகளைப் புரிவதில் தயக்கம் காட்டினர். அப்படி உதவி செய்வது தவறு என்பதே அவர்களது அபிப்பிராயமாக இருந்தது. அப்போது தான்இப்படிக் கொடுக்கலாம் என்று கூறிசலுகை தரும் பின்வரும் குர்ஆன் வசனம் இறங்கியது.(7)


'(நபியே) அவர்களை நேர்வழியில் நடாத்துவது உமது பொறுப்பல்ல. ஆனால்தான் நாடியவர்களை அல்லாஹ் தான் நேர்வழியில் செலுத்துவான். இன்னும்செல்வத்திலிருந்து நீங்கள் எந்தளவு செலவு செய்தாலும்அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும். அல்லாஹ்வின்  திருமுகத்தை நாடியே நீங்கள் செலவு செய்கிறீர்கள். (அப்படியிருக்க) பணத்திலிருந்து எந்தளவு நீங்கள் செலவு செய்தாலும் அதற்குரிய கூலி உங்களுக்குப் பூரணமாகத் திருப்பித் தரப்படும். நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்'. (2:272)


இந்த வசனத்திற்கு விளக்கம் கூறும் இமாம் இப்னு கதீர் அவர்கள், 'கொடை கொடுப்பவர் அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்த்துக் கொடுத்தால்அவர் தான் யாருக்குக் கொடுத்தேன் என்பது பற்றிக் கவனிப்பது அவசியமில்லை. பெறுபவன் நல்லவனாககெட்டவனாகபெறத் தகுதியானவனாக அல்லது தகுதியற்றவனாக இருந்தாலும் கொடை கொடுப்பவர் தனது எண்ணத்திற்காகக் கூலி பெறுவார்என்றார்கள்.(8)


ஸூரா பகராவின் மேற்படி வசனம் (2:272) இறங்கியமைக்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஸதகா கொடுக்க வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது இந்த திருவசனம் இறங்கி எந்த மதத்தைச் சேர்ந்த எவர் கேட்டுவந்தாலும் அவருக்கு தர்மம் கொடுக்கும்படி கட்டளையிட்டது என இப்னு அப்பாஸ்(றழி) கூறினார்கள்.(9)


காபிர்களான ஏழைகள்

பெற்றாருக்கும்உறவினருக்கும் மட்டுமல்லபொதுவாக வறுமையில் சிக்கித் தவிக்கும் காபிர்களுக்கும் உதவி ஒத்தாசைகளைப் புரிவதன் அவசியம் பற்றியும் இஸ்லாம் வலியுறுத்திக் கூறியுள்ளது. மதத்தால்கொள்கையால் வேறுபட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் அல்லாஹ்வின்  படைப்புக்கள் என்ற வகையில் காபிர்களை கருணையுடன் நோக்குவதும் வசதி வாய்ப்புக்களை செய்து கொடுப்பதும் முஸ்லிம்களது கடமையாகும். இது பற்றி வலியுறுத்தும் வசனம் ஸூறா மும்தஹனாவில் இடம்பெற்றுள்ளது.


'மார்க்க விடயத்துக்காக உங்களுக்கெதிராகப் போராடாமலும்உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை(உபகாரம்) செய்வதையும் அவர்களுக்கு நீங்கள் நீதி செலுத்துவதையும் (லாயன்ஹாகுமுல்லாஹு) அல்லாஹ் தடுக்கமாட்டான். நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்'.

இந்த வசனத்தில் வரும் 'லா யன்ஹாகு முல்லாஹ்’ என்ற சொற் பிரயோகத்துக்கு 'உங்களைத் தடுக்கமாட்டான்’ என பெரும்பாலானவர்கள் கருத்துக் கொடுத்தாலும் அதற்கு 'கட்டாயமாக நீங்கள் செய்ய வேண்டும்என்று பொருள் கொள்வதே மிகப் பொருத்தமாகும் என கலாநிதி கர்ளாவி கூறுகிறார். இதற்கு அவர்ஸூறா பகராவின் 158ம் வசனத்தில் வரும் 'பலாஜுனாஹ’ எனப்படும் சொற்பிரயோகத்தை ஆதாரமாகக் கொள்கிறார். 'குற்றமில்லை’ என்ற மொழிப் பொருளை அது தந்தாலும் இங்கு கட்டாயக் கடமை என்றே கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் ஹஜ்ஜுக்கு அல்லது உம்ராவுக்குச் செல்வோர் சபாமர்வாவிற்கிடையே தொங்கோட்டம் ஓடுவது தவறல்ல என்று இந்த வசனம் கூறினாலும் ஹஜ்ஜின் நடைமுறைகளில் இந்த வகை ஓட்டம் கடமையாக இருக்கிறது என அவர் கூறுகிறார்.(10) எனவேசெய்யத் தகாதது என முஸ்லிம்களில் சிலர் சில கருமங்களைக் கருதிக்கொண்டிருக்கும் போதே இப்படியான சொற்பிரயோகங்களை அல்லாஹ் குர்ஆனில் கையாண்டான்.


அந்தவகையில்முஸ்லிம்களுடன் நல்லிணக்கமாக வாழ விரும்பும் ஏழைகளான பிற மதத்தவருக்கு உபகாரம்(பிர்) செய்வதும்,அவர்களுடன் நீதி நியாயமாக நடப்பதும் கடமை என்றே இந்த வசனத்திற்குப் பொருள் கொடுக்கப்பட வேண்டும். அது மட்டுமல்லஇங்கு உபகாரம் செய்வது என்ற விடயம் 'பிர்’ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. மொழிப் பொருளில் 'பிர்’ என்பது சகல விதமான நற்காரியங்கள்உபகாரங்களுக்கும் பொதுவாகப் பிரயோகிக்கப்படுகிறது. மனிதன் தனது தாய் தகப்பருக்கு உபகாரம் செய்யப் பணிக்கும் வசனத்தில் கூட 'பிர்’ என்ற சொல்லே பிரயோகிக்கப்படுகிறது(11) என கர்ளாவி தெரிவிக்கிறார்.


இந்த வசனத்தில் வரும் உபகாரம் செய்தல் (பிர்) எனும் சொற்பிரயோகத்தை விளக்கப் புகுந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படைகள் பற்றிய ஆய்வில் பாண்டித்தியம் பெற்ற இமாம் கராபி(றஹ்) அவர்களின் கருத்துக்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்:
'(காபிர்களுக்கு உதவி உபகாரம் செய்வது என்பது) அவர்களது பலவீனர்களுடன் இதமாக நடந்துகொள்வதுஅவர்களது ஏழைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுஅவர்களின் பசித்தவர்களுக்கு உணவளிப்பதுஅவர்களின் ஆடையற்றவர்களுக்கு ஆடை வழங்குவதுவார்த்தைகளில் மென்மை காட்டுவது... அவர்களது பொருட்களைகுடும்பத்தைப் பாதுகாப்பது...'(12) என எழுதுகிறார்.


எனவேதான்ஒருதடவை ஜாபிர் இப்னு ஸைத் அவர்களிடம் 'ஸதகா யாருக்கு வழங்கப்பட வேண்டும்?’ என வினவப்பட்டபோது 'உங்களது மார்க்கத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும்  முஸ்லிம்களின் பாதுகாப்பிலுள்ள பிற சமயத்தவர்(திம்மீ)களுக்கும்என்றார்.(13)


'நபி(ஸல்) அவர்கள்யூதர்களின் ஒரு குடும்பத்தாருக்கு ஸதகா வழங்கினார்கள். அது அவர்களுக்குத் தொடர்ந்தும் வழங்கப்பட்டதுஎன ஸஈத் இப்னுல் முஸய்யப் கூறுகிறார்.(14)


அல்லாஹ் தனது அடியார்களில் புனிதர்களின் பண்புகளில் ஒன்றைப் பற்றிக் கூறுகையில் 'அவர்கள் உணவை விரும்பிய போதிலும் ஏழைக்கும்அநாதைக்கும்கைதிக்கும் அந்த உணவை வழங்குவார்கள்' (76:8)என்கிறான். இந்த வசனம் இறக்கப்பட்ட மக்கா காலப்பிரிவில் கைதிகளில் இணைவைத்து வணங் குவோர் மட்டுமே இருந்தனர் என ஹஸன் போன்றோர் கூறியுள்ளனர்.(15)அப்படியாயின் இணைவைத்தவர்களுக்கு நல்லடியார்கள் உணவளித்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புலனாகிறது.


அந்தவகையில்தான் நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த பின்னர் மக்காவில் கடும் வரட்சி நிலவிய சந்தர்ப்பத்தில் அங்கிருந்த ஏழை எளியோருக்குப் பகிர்ந்தளிப்பதற்காக 500தீனார்களை அபூசுப்யானுக்கும் அபூசப்வானுக்கும் அனுப்பிவைத்தார்கள் என வரலாறு கூறுகிறது.(16)நபியவர்களும் அன்னாரது ஸஹாபாக்களும் முஷ்ரிக்குகளால் சொல்லொணாத் துயரங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டும் கூட இவ்வாறான இரக்க சிந்தையோடு அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.


எனவே, 'திம்மிக்கு மட்டுமல்லஇஸ்லாத்தை எதிர்த்துப் போர் புரியும் 'ஹர்பீ|க்கும் ஸகாத் பொருளைக் கொடுக்கலாம் என்று சையித் சாபிக்இமாம் ஸர்கஸீ ஆகியோர் கூறியுள்ளனர்.(17)


பைதுல்மாலிலிருந்து நிவாரண உதவிகள்

இஸ்லாமிய அரசு தனது அதிகார எல்லைக்குள்வாழும் அனைத்து இனத்தவருக்கும் எவ்வித வித்தியாசமுமின்றி கைகொடுப்பதற்கும் சங்கடங்களிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கும் கடமைப்பட்டி ருக்கிறது.
பொதுவாக இஸ்லாமிய அரசில் சிறுபான்மையினராக வாழும் திம்மீக்கள் எனப்படுவோர் 'ஜிஸ்யா’ எனப்படும் ஆள்வரியை இஸ்லாமிய அரசுக்குச் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால்திம்மீ ஏழ்மைநோய்முதுமை போன்ற காரணங்களால் இந்த வரியைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டால்அவர் அந்த வரியைச் செலுத்தத் தேவையில்லை என்பது மட்டுமல்லஅத்தகைய நபர் இஸ்லாமிய அரசின் திறைசேரியான 'பைதுல்மாலில்’ இருந்து தொடர்ந்தும் சகாய நிதியைப் பெற்றுவருவார் என்பது இஸ்லாத்தில் உள்ள அற்புதமான ஒரு சட்டமாகும். இது இஸ்லாமிய வரலாற்றில் இருந்த நடைமுறை யாகும். உலக அரசுகளின் கீழ் வாழ்ந்த எந்தவொரு சிறுபான்மையினரும் பெறாத கவனிப்பையும்  உதவியையும் முஸ்லிம் அரசின்கீழ் திம்மீக்கள் பெற்றனர்(18) என கலாநிதி ஹாமித் ஹஸ்ஸான் கூறுகிறார்.

இதற்கு பின்வரும் சில உதாரணங்கள் தக்க சான்றாகும்:

1.காலித் பின் வலீத்(றழி) ஈராக் பிரதேச ஹய்ரா எனும் பகுதியை இஸ்லாமிய ஆளுமையின் கீழ் கொண்டுவந்த பின்னர் அங்கு வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்களுக்குப் பின்வருமாறு வாக்குறுதியளித்து அவர்களுடன் உடன்பாடொன்றைச் செய்துகொண்டார்:

 'அந்தப் பகுதியில் (திம்மீக்களாக) ருப்பவர்களில் எந்தவொரு வயோதிபராவது தொழில்செய்ய முடியாத நிலைக்கு உள்ளாகிவிட்டால் அல்லது ஏதாவது பீடையால் அவர் பாதிக்கப்பட்டால்அல்லது எவராவது பணக்காரராக இருந்து ஏழையாகி அவரது மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு தர்மம் கொடுக்கும் நிலைக்கு அவர் வந்துவிட்டால்அவரிடமிருந்து ஜிஸ்யா அறவிடப்படமாட்டாது. அவர் ஹிஜ்ரத்தின் பூமியிலும் தாருல் இஸ்லாத்திலும் தங்கியிருக்கும் காலமெல்லாம் அவருக்கும் அவரது குடும்பத் தாருக்கும் முஸ்லிம்களது பைதுல்மாலிலிருந்து உதவித் தொகை வழங்கப்படும்.(19)


காலித்(றழி) தனது குடிமக்களுக்கு உலக வரலாறே கண்டிராத ஒரு காப்புறுதி முறையை ஈங்கு அறிமுகம் செய்தார்கள். வேலையின்மைபலவீனம்முதுமை என்பவற்றினால் பாதிக்கப் பட்டவர்களிடம் அரசு வரிகளை அறவிடக்கூடாது என்பது மட்டுமல்லஇதுபோன்ற எந்தவித பலவீன நிலைகளுக்கு உள்ளாவோருக்கும் அது கைகொடுக்கும். இது அபூபக்கர்(றழி) அவர்களது கிலாபத்தில் நடந்த சம்பவமாகும். இதுபற்றி கலீபாவுக்கு காலித்(றழி) அறிவித்தார்கள். ஆனால்கலீபா ஆட்சேபிக்கவில்லை. பல ஸஹாபாக்கள் இதுபற்றி அறிந்திருந்தனர். எனவேஇது ஒரு இஜ்மாவாக(ஏகோபித்த முடிவாகக்)கணிக்கப்படும்.(20)


கலாநிதி ஹாமித் ஹஸ்ஸான் அவர்கள் தொடர்ந்து கூறும்போதுஇதற்கு முஸ்லிம்களை விட திம்மீக்கள் அருகதையுடையவர்களாவர். இஸ்லாமிய நாட்டில் மக்களிடம் கையேந்தி தர்மங்களிலும் கொடைகளிலும் தங்கி வாழ்வதற்கு எவருக்கும் அனுமதிக்கப்படமாட்டாது. அவர்கள் திம்மீக்களாக இருப்பினும் சரியே. அந்த திம்மீக்கள் இஸ்லாத்தில் நுழைய மறுப்போராகவோ இஸ்லாத்தின் பார்வையில் அசத்தியமான மார்க்கத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் எனப் பிடிவாதமாக இருப்போராகவோ இருந்தபோதிலும் அவர்களுக்கும் இந்த உதவிகளை இஸ்லாம் வழங்கும் என்கிறார்.(21)


2.பஸராவின் கவர்னராக இருந்த அதீ இப்னு அர்தர்க்கு கலீபா உமர் இப்னு அப்தில் அஸீஸ்(றஹ்) பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்: 'உங்களிடமுள்ள திம்மீக்களில் வயது சென்றஉடல் பலவீனமுற்றுள்ளசம்பாத்தியங்கள் எதுவுமற்றவர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அவர்களுக்கு(த் தேவையான) பொருத்தமான அளவு வசதிகளை அவர்களுக்கு முஸ்லிம்களது பைதுல் மாலிலிருந்து தொடர்ந்தும் செய்து வாருங்கள்.ஏனெனில்பின்வரும் சம்பவத்தை நான் கேள்விப்பட்டேன். ஒருதடவை உமர்(றழி) அவர்கள் மக்களது வீட்டு வாயில்களில் யாசகம் கேட்டுத் திரிந்த வயது முதிர்ந்த ஒரு திம்மியைக் கண்டார்கள். அவரைப் பார்த்து 'உமது வாலிபப் பருவத்தில் உம்மிடமிருந்து நாம் ஜிஸ்யாவை அறவிட்டுவிட்டு உம்முடைய கிழப் பருவத்தில் உம்மை நாம் கைவிட்டுவிட்டால் உமக்கு நாம் நீதி செலுத்தியவர்களாகமாட்டோம்என்று கூறியதுடன் பின்னர் அவருக்குப் பொருத்தமான (தேவையான) அளவு பணத்தை பைதுல்மாலில் இருந்து தொடர்ந்தும் வழங்கி வந்தார்கள்'.(22)


எனவேபஸராவிலிருந்த பலவீனமானஏழைகளானவயோதிபர்களான 'திம்மீ|க்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்த சம்பவத்தை உமர் இப்னு அப்துல் அஸீஸ் (றஹ்) அவர்கள் உதாரணமாகக் காட்டியிருக்கிறார்கள்.


3.பலாதுரி அவர்கள் அறிவிப்பதாவது: கலீபா உமர்(றழி) அவர்கள் டமஸ்கஸ் சென்று திரும்பும் வழியில் கிறிஸ்தவர்களில் குஷ்டரோகிகளான சிலரைக் கடந்துசெல்ல நேரிட்டது. அப்போது அவர்கள் அந்த நோயாளிகளுக்கு ஸதகாப் பொருட்களிலிருந்து உதவி வழங்கும்படியும் இஸ்லாமிய அரசு அவர்களுக்குரிய உணவு மற்றும் உதவிகளை ஓர் ஒழுங்கு முறைப்படி தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளைப் பணித்தார்கள்.(23)


இஸ்லாம் பொதுவான ஓர் அடிப்படை என்ற வகையில் சமுதாயப் பாதுகாப்பை முஸ்லிம்முஸ்லிம் அல்லாத அனைவருக்கும் உத்தரவாதப்படுத்துகின்றது. முஸ்லிம் சமூகத்தில் உணவுஆடைஇல்லிடம்மருத்துவ வசதிகள் இல்லாமல் எவரும் இருக்கலாகாது. இப்படியானவர்கள் முஸ்லிம்களாகவோ அல்லது திம்மிகளாகவோ இருப்பினும் அவர்களது இடுக்கண்களைக் களைவது ஒரு மார்க்கக் கடமையாகும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.


ஷாபிமத்ஹபைச் சேர்ந்த இமாம் ரம்லீ அவர்கள் இமாம் நவவியின் 'அல்மின்ஹாஜுக்கு வழங்கிய விளக்கவுரையில் முஸ்லிம்களுக்குப் போலவே திம்மிகளது துன்ப துயரங்களைத் துடைப்பதும் 'பர்ளு கிபாயாஎன்றும் 'வாஜிப்’ என்றும் தெரிவிக்கிறார். திம்மீக்களது துன்பங்களை நீக்க முயற்சிப்பது என்றால் என்ன என்று அவர் விளக்கம் கூறும்போதுமாரிகோடை காலங்களுக்கு ஏற்ற வகையிலான ஆடைகள்உணவுகள் என்பன வழங்கப்பட வேண்டும் என்று கூறியதுடன் நிறுத்திக்கொள்ளாதுதிம்மியின் வைத்தியருக்கான பணம்மருந்துக்கான பணத்தொகைஇடைக்கிடை வந்துசெல்லும் வேலைக்காரனின் கூலி போன்றன கூட வழங்கப்பட வேண்டும் என்ற அளவுக்கு அவர்களது நோக்கு விரிந்ததாக இருந்தது.(24)


எனவேபைத்துல்மாலிலிருந்து கூட திம்மிகளில் ஒருசாரார் உதவிகளைப் பெறுவார்கள் என்பதனை இதிலிருந்து புரிய முடியும்.


ஸதகதுல் பித்ர்

மேலும்ஸதகதுல் பித்ரிலிருந்து பிற சமயத்தவர்களுக்குக் கொடுக்கலாமா என்பதில் இஸ்லாமிய சட்டவல்லுனர்களிடம் கருத்துபேதங்கள் உள்ளன. இமாம்;களான ஷாபிஈஅஹ்மத் உள்ளிட்ட பெரும்பாலான இமாம்கள் கொடுக்கமுடியாது என்பதற்கு சில நியாயங்களைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால்இமாம்களான ஸுஹ்ரிஅபூஹனீபாமுஹம்மத்இப்னுஸிப்ரமா போன்றோர் கொடுக்கலாம் என்றனர்.(25)


கொடுக்க முடியும் என்று கூறுவோர் காட்டும் நியாயங்களில் சிலவற்றை சுருக்கமாக நோக்கலாம்:

1. 'நீங்கள் ஸதகாக்களை பிறருக்குத் தெரியும் வண்ணம் கொடுத்தால் அது நல்லது. அவற்றை மறைத்து ஏழைகளுக்குக் கொடுத்தால் அதுவும் உங்களுக்கு நல்லதாகவே இருக்கும்' (2:271) என்ற வசனத்தில் வரும் 'ஸதகாக்கள்என்பதில் ஸதகதுல் பித்ரும் அடங்கும். மேலும் 'ஏழைகள்என்று பொதுவாகவே குறிக்கப்பட்டிருப்பதால் முஸ்லிமல்லாத ஏழைகளுக்கும் கொடுக்கலாம். அதுபோலவேஸூறா மாயிதாவின் 89ம் வசனமும்ஸூறா முஜாதலாவில் வரும் 4ம் வசனமும் கப்பாரா (குற்றப்பரிகாரம்) வழங்கப்பட வேண்டிய ஏழைகள் பற்றிக் கூறுகையில் 10 ஏழைகள், 60 ஏழைகள் என்று பொதுவாகவே கூறியிருப்பது பிற மதத்தவர்களுக்கும் கப்பாராநேர்ச்சைகளை வழங்க முடியும் என்பதைக் காட்டுகிறது.(26)


2.ஏற்கனவே விளக்கப்பட்ட ஸூரா மும்தஹானாவில் 8ம் வசனம் முஸ்லிம்களை எதிர்த்துப் போராடாதோருக்கு 'பிர்’ (உபகாரம்) செய்யும்படி கூறுகிறது. குடமையானஅல்லது கடமையற்ற ஸதகாக்களிலிருந்து அவர்களுக்குக் கொடுத்தாலும் அதுவும் 'பிர்ஆகவே அமையும்.

3.அதேபோல் ஏற்கனவே விளக்கப்பட்ட ஸூரா பகராவின்(2:272) என்ற வசனம் சகல மதத்தவர்களுக்கும் ஸதகாக்களைக் கொடுக்கலாம் என்று கூறுகிறது. எனவேநேர்ச்சைகப்பாரா(குற்றப்பரிகாரத்துக்காக வழங்கப்படும் பணம்) என்பவற்றை ஏழைகளுக்கு வழங்கினால் அவை ஸதகாக்களாகவே அமையும்.

4.அஸ்மா(றழி) அவர்கள் ஸதகாவை எதிர்பார்த்து வந்த தனது தாய்க்கு உபாரம் செய்தமைநபியவர்கள் யூதர்களின் ஒரு குடும்பத்தாருக்கு ஸதகா கொடுத்ததாக வரும் அறிவிப்பு என்பவற்றை நோக்கும்போது 'ஸதகதுல் பித்ர்ஐயும் இவ்வாறு வழங்க முடியும் எனக் கொள்ளலாம்.


இவ்வாறு 'ஸதகதுல் பித்ர்’ ஐ பிற சமயத்தவர்களுக்குக் கொடுக்க முடியுமா முடியாதா என்பது சம்பந்தமான கருத்து பேதங்களைக் கூறிய பின்னர்கலாநிதி பத்ரான் அபுல் ஐனைன் அவர்கள் தமது கருத்தை பின்வருமாறு தெரிவிக்கிறார்:


 'இரு சாராரது வாதங்களை நோக்கும்போது ஹனபீக்களது கருத்தை நாம் தெரிவு செய்கிறோம். முஸ்லிமல்லாதோருக்கு ஸதகதுல் பித்ரிலிருந்து வழங்க முடியும் என்ற கூற்றின் மூலம் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்குமிடையில் துண்டிக்கப்பட்ட உறவை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். இஸ்லாத்தின் பரந்துபட்ட தன்மையின்பால் அவர்களை வழிகாட்ட பாதையைத் திறக்கலாம். கருத்தொற்றுமையை வளர்த்து முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்குமிடையில் உருவாகியுள்ள மோதல்பிணக்கின் கதவை மூடலாம்'.(27)


கலாநிதி பத்ரான் அவர்கள் இவ்வாறு கூறினாலும் முஸ்லிம்களிலுள்ள ஏழைகளுக்கு ஸகாதுல் பித்ர் விநியோக விடயத்தில் முன்னுரிமை வழங்க வேண்டியிருக்கும் என்று கலாநிதி கர்ளாவியும்இஸ்லாத்திற்கெதிராக யுத்தம் புரியாத காபிராக இருக்க வேண்டும் என்று இமாம் அபூஹனிபாவும் நிபந்தனையிட்டுள்ளனர்.(28) இது இப்படியிருக்கசில தாபியீன்கள் கிறிஸ்தவ பாதிரிகளுக்கு பித்ரா விலிருந்து வழங்கியுள்ளனர் என்பதும் ஈங்கு குறிப்பிடத்தக்கதாகும்.(29) ஆனால்,முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகள் இது விடயமாக மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்வது முஸ்லிம்களது கடமையாகும்.


உள்ஹிய்யா

உள்ஹிய்யா இறைச்சியை பிற சமயத்தவருக்கு வழங்கலாமா என்பது பற்றிய விவகாரத்திலும் சில இமாம்களது கருத்துக்களை எடுத்துக்காட்டாக இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். இமாம் இப்னு குதாமா அவர்கள் கூறும்போது:-

'அதிலிருந்து(உள்ஹிய்யா இறைச்சியிலிருந்து) காபிருக்குக் கொடுக்க முடியும். இவ்வாறுதான் ஹஸன்அபூதவ்ர் ஆகியோரும் இஜ்திஹாத் முயற்சியின்போது பகுத்தறிவு ரீதியான அணுகுமுறைக்கு முக்கியத்துவமளிப்போரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.


உள்ஹிய்யா என்பதும் ஓர் உணவுதான். ஏனைய உணவுகளைப் போலவே அதனையும் திம்மீக்கு வழங்க முடியும். ஏனெனில்அது ஒரு உபரியான(சுன்னத்தான) ஸதகாவாகும். எனவேஇதனை திம்மீக்கும் கைதிகளுக்கும் ஏனைய உபரியான ஸதகாக்களைப் போல் வழங்க முடியும்.(30)


உள்ஹிய்யாவின் ஒரு பங்கை யூதனாகிய தனது அயல் வீட்டானுக்கு வழங்கும்படி அப்துல்லாஹ் இப்னு உமர்(றழி) அவர்கள் தனது அடிமைக்குக் கட்டளையிட்டார்கள். ஒரு தடவைக்குப் பல தடவை இதுபற்றி வலியுறுத்தினார்கள். அடிமை ஆச்சரியமடைந்து இந்த யூத அயலவன் விடயமாக இந்தளவு கவனமெடுப்பதன் இரகசியமென்ன என அவர்களிடம் வினவிய போது அதற்கு அன்னார் 'நபிகளார்(ஸல்) அவர்கள்;: 'அயல்வீட்டான் விடயமாக நன்றாக நடந்துகொள்ளும்படி ஜிப்ரயீல்(அலை) அவர்கள் எனக்கு வலியுறுத்திக் கூறினார்கள். எனது வாரிசுச் சொத்திலிருந்து பக்கத்து வீட்டானுக்கு பங்கு கொடுக்கும்படி சொல்லிவிடுவாரோ என நான் நினைக்குமளவுக்கு அவர்களது வலியுறுத்தல் அமைந்திருந்தது|.கூறியிருக்கிறார்கள் எனவேஇந்தளவு அயல்வீட்டான் விடயமாக கரிசனை எடுப்பதற்கு இதுதான் காரணம்என்றார்கள்.(31)


ஸகாத்திலிருந்து வழங்கலாமா?

ஏழ்மையைப் போக்கும் நோக்குடன் ஸகாத் பணத்திலிருந்து பிற சமயத்தவருக்குக் கொடுக்க முடியாது என்றும் இது இஜ்மாவான முடிவு என்றும் இமாம் இப்னுல் முன்திர் கூறஇமாம் இப்னு குதாமா கொடுக்கக் கூடாது என்பதில் சட்ட வல்லுனர்களுக்கு மத்தியில் கருத்து பேதமில்லை என்றும் கூறுகிறார். பெரும்பாலான சட்டவல்லுனர்கள்கூட ஸகாத்திலிருந்து கொடுக்க முடியாது என்ற கருத்தையே கொண்டுள்ளனர்.


ஆனால்இமாம்களான இப்னு ஸீரீன்ஸுஹ்ரீஹனபி மத்ஹபைச் சேர்ந்த ஸுபர் போன்றோர் காபிர்களுக்கு ஸகாத் பங்கிலிருந்து கொடுக்கலாம் என்கின்றனர்.(32)


ஸகாத் பெறத் தகுதியான எட்டுக் கூட்டத்தாரில் ஒரு சாராராகிய 'மிஸ்கீன்கள்’ என்போர் வேதம் கொடுக்கப்பட்ட முஸ்லிமல்லாத யூதநஸாராக்களையே குறிக்குமென உமர்(றழி) அவர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள்(33) என்பதுவும் இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
இமாம் இக்ரிமாவின் கருத்துப்படியும் 'மிஸ்கீன்’ என்ற சொல் வேதம் கொடுக்கப்பட்டவர்களிலுள்ள ஏழைகளை குறிக்கும் என இமாம் தபரீ அவர்கள் எழுதியுள்ளார்கள்.(34)


டமஸ்கஸிலிருந்து திரும்பும் வழியில் உமர்(றழி) அவர்கள் குஷ்டரோகிகளான கிறிஸ்தவர்களுக்கு வழங்கிய உதவித்தொகை ஸகாத்திலிருந்து கொடுக்கப்பட்டது என்றும்எனவேஸகாத் பணத்திலிருந்து பிற சமயத்தவருக்குப் பங்கு வழங்கக்கூடாது என்பதற்கு முன்வைக்கப்படும் ஆதாரங்களை ஏற்க முடியாது என்றும் கலாநிதி கர்ளாவி வாதிடுகின்றார். ஸூறா மும்தஹனாவின் 8ம் வசனத்தின் பொதுவான கருத்தின்படி பார்க்கும்போதும் உமர்(றழி) ஸகாத்திலிருந்து வழங்கியிருப்பதை நோக்கும்போதும் கொடுக்க முடியாது என்போரது வாதம் பிழையானது என்பது அவரது கருத்தாகும்.


அப்துல் கரீம் ஸைதானும் இவரது இக்கருத்தையே கொண்டிருக்கிறார். ஆனால்ஸகாத் பணத்தைப் பங்கீடு செய்யும்போது முஸ்லிம் ஏழை எளியோர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் பணம் மேலதிகமாக இருப்பின் அதேவேளை முஸ்லிம்களது ஏழைகள் பாதிக்கப்படமாட்டார்களெனின் அவ்வேளையில் பிற சமயத்தவர்களுக்கு வழங்க முடியும் என்றும் கர்ளாவிஸைதான் ஆகியோர் கருதுகின்றனர்(35)


முஅல்லபது குலுபுஹும்

ஸகாத் பெறத் தகுதியானவர்களில் எட்டில் ஒரு பிரிவினர் 'முஅல்லபது குலுபுஹும்’ ஆவர். காபிர்களாக இருப்பவர்களில் ஒரு சாராருக்குஅவர்கள் இஸ்லாமாகுவர் அல்லது அவர்களுக்குப் பின்னுள்ள அவர்களது சமூகம் இஸ்லாத்தைத் தழுவுவர் என எதிர்பார்த்து அதாவது அவர்களது உள்ளங்களை வென்றுகொள்ள இப்பங்கு வழங்கப்படும். நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்பொழுது ஸப்வான் இப்னு உமையாவுக்கு வழங்கியமை இதற்கான உதாரணமாகும்.


அல்லது காபிர்கள் இஸ்லாத்திற்குப் பெரும் ஊறு விளைவிப்பர் என்ற பயம் இருந்தால் அவர்களது உள்ளங்களை திசைதிருப்ப இங்கு பயன்படும். அபூசுப்யான்அல்அக்ரஉ போன்றவர்களுக்கு இக் காரணத்துக்காகவே வழங்கப்பட்டது. இது தவிர இஸ்லாத்தில் புதிதாக நுழைந்தோர் முஸ்லிம்களிலுள்ள பலவீனமான ஈமான் கொண்ட தலைவர்கள்எல்லைப்புறத்தில் காவல் புரிவோர் போன்றோரும் முஅல்லபது குலூப் பிரிவில்(36) அடங்கினாலும் குப்ரிலே இருக்கும் நிலையில் ஸகாத் பணம் பெறுவோர் பற்றிய ஆய்வே இங்கு எமக்கு முக்கியம் பெறுகிறது.


இமாம் இப்னு தைமியா தனது பதாவாவில் இப்படியான ஒரு பங்கு பற்றி ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் மத ரீதியில் வழி பிறழ்ந்தவர்கள் எனக் கூறிவிட்டு நபிகளார்(ஸல்) இப்பங்கை காபிர் களுக்கு வழங்கிய போது ஹுவைஸரா என்பவரும் ஆட்சேபனை தெரிவித்தமையை எமக்கு ஞாபகமூட்டுகிறார்.(37)


முடிவுரை

மதத்தால் வேறுபட்டவர்களையும் கூட இஸ்லாம் சகிப்புத் தன்மையோடு நோக்குகிறது. அனைவரும் மனிதர்கள்இறைவனின் படைப்புக்கள்கருத்து பேதங்களைத் தவிர்ப்பது சாத்தியமில்லை என்ற நிலைக்களனிலிருந்தே இந்த சகிப்புத்தன்மை நிலைப்பாடு பிறப்பிக்கிறது. ஆகவேஒரு முஸ்லிம் தனது சமுதாயத்தவர்களைக் கருணைக் கண்கொண்டு நோக்கிஅவர்களது துயர்களைத் துடைக்க முன்வருவது போலவே மாற்று மதங்களைச் சேர்ந்தவர்களையும் கவனித்தாக வேண்டும். இக்கைங்கரியம் இறைவனின் அன்பையும் மகத்தான கூலியையும் பெற்றுத்தரும் என்பதுபோலவே அந்த மக்களது உள்ளங்களை வெல்லவும் சமூகக் கூட்டுறவை வளர்க்கவும் உதவும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.


இக்கட்டுரையில்பிற மதத்தவருக்கான பொருளாதார உதவிகள் பற்றி கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் விளக்கப்பட்டது. முஸ்லிம்கள் அரச அதிகாரங்களைக் கையில் வைத்திருந்த காலப் பிரிவுகளில்கூட இவ்வாறான உதவிகளை பிறசமயத்தவர்களுக்கு அவர்கள் வழங்கியிருக்கிறார்கள் எனின்பிற சமயத்தவரது உள்ளங்களை வெல்வதற்கும் அவர்களது எதிர்ப்புக்களை கூடிய பட்சம் குறைப்பதற்குமான தேவை அதிகமாக எழுந்துள்ள இலங்கை போன்றதொரு முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் இதுபோன்ற நடைமுறைகள் பற்றி மேலும் பரந்த மனப்பான்மையுடன் ஆய்வுகளைச் செய்வதும் நடைமுறைக்கு அவசியமான தீர்வுகளைக் காண்பதும் எவ்வளவு அவசியம் என்பதனை இலகுவில் புரியலாம்.

உசாத்துணைகள்

1.    அபுல் ஐனைன்பத்ரான் (1984)அல் அலாகாதுல் இஜ்திமாஈய்யா பய்னல் முஸ்லிமீன் வகைரில் முஸ்லிமீன்தாருன் நஹ்ழதில் அரபிய்யா - பெய்ரூத்.
2.     ஸைதான்அப்துல் கரீம் (1982), அஹ்காமுல் திம்மிய்யீன் வல் முஸ்தர்மினீன்முஅஸ்ஸஸதுர் ரிஸாலாபெய்ரூத்.
3.     அஹ்காமுத் திம்மிய்யீன் - அப்துல் கரீம் ஸைதான். பக்: 472-478
4.     காஸானி,(ஹி. 1327)பதாஈஉஸ் ஸனாஈஅல்மத்பஅதுல் ஜமாலிய்யா - எகிப்துபா. 4, பக். 42
5.     பத்ரான் - பக். 155
6.     புகாரிமுஸ்லிம்அஹ்மத்
7.     இப்னு கதீர்தப்ஸீர் அல்குர்ஆனில் அழீம்பாகம் 1, பக். 448
8.     மேற்படி நூல்: 449
9.     மேற்படி நூல்: 448
10.   கர்ளாவி, (1985) அல்ஹலாலு வல் ஹராமு பில் ஈஸ்லாம்அல் மக்தபுல் இஸ்லாமீ (14ம் பதிப்பு) பக். 304
11.  மேற்படி நூல்: 304
12.  கராபீஅல்புரூக் - பாகம் 3 பக். 15
13. இப்னு ஹஸம்(1952) அல்முஹல்லாஇதாரதுத் பாதில் முனீரா - கெய்ரோ
14.  அபூ உபைத் (ஹி. 1353) அல்மத்பஅதுல் ஆமிரா - பக். 613 - கெய்ரோ
15.   முஸ்னப் அபீஸைபா - பாகம் 4, பக். 39
16.   ஸரஹுஸ் ஸைரில் கபீர்பா-1, பக்-69
17.  சையித் (1365), சாபிக் பிக்ஹுஸ்ஸுன்னாமக்தபதுல் ஹித்மாத் அல்அரபிய்யா
18.  ஹஸ்ஸான்ஹுஸைன் ஹாமித்(1995) ஹக்குத் தகாபுலில் இஜ்திமாதஉவா அகடமிஇஸ்லாமாபாத்
19.  அபூயூஸுப் (ஹி. 1352) அல்மத்பஅதுஸ்ஸலபிய்யா பக். 144 -கெய்ரோ
20.   ஹாமித்ஹஸ்ஸான் பக்.53
21.  பலாதூரி (1958) புதுஹுல் புல்தான் - பக் 177, தாருன் நஸீர் - பெய்ரூத்
22.   மேலது
23.   கர்ளாவி, (1983) கய்ருல் முஸ்லிமீன் பில் முஜ்தமஇல் இஸ்லாமிமுஅஸ்ஸதுர் ரிஸாலா (2ம் பதிப்பு)
24.  ரம்லீநிஹாயதுல் முஹ்தாஜ்பா. 8 பக். 46
25.   சையத் ஸாபிக்- பா.1, பக்.484
26.   கர்ளாவி (1985) பிக்ஹுஸ்ஸகாத் (15ம் பதிப்பு) முஅஸ்ஸதுர் ரிஸாலா - பெய்ரூத் பாகம் 2,3.
27.   பத்ரான் பக். 194
28.  கர்ளாவீபிக்ஹுஸ்ஸகாத்பா.3, பக்.702.715
29.  இப்னு அபூஷைபா - பா.4, பக். 39, அபூ உபைத்பக். 613
30.  இப்னு குதாமா (1983) முக்னீதாருல் கிதாபில் அரபீபா.11, பக்.110 - லெபனான்
31.  கர்ளாவிகய்ருல் முஸ்லிமீன் பக்.47 (ஜிப்ரயீல் -அலை- பற்றிய ஹதீஸ்புகாரிமுஸ்லிம்அஹ்மத் போன்ற கிரந்தங்களின் பதிவாகும்.
32.   நவவி - மஜ்முஉபா.6, பக்.228
33.   விரிவாகப் பார்க்க. அபூயூசுப் - பக். 126,144 அபூஷைபா - பா.4, பக். 40
34.     தபரீ - தப்ஸீருத் தபரீ (ஹி. 1343) மத்பது முஸ்தபா அல் பாபீ - கெய்ரோ
35.   கர்ளாவி - பிக்ஹுஸ்ஸகாத் - பக்.705, ஸைதான்அஹ்காம்பக். 108
36.   கர்ளாவி - பிக்ஹுஸ் ஸகாத் - பா.2, பக். 594
37.   இப்னு தைமியா (1991) மஜ்மூஉ பதாவாபா.28, பக். 288,291  தாரு ஆலமில் குதுப் - ரியாத்.

நன்றி - http://shmfaleel.blogspot.com/

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.