கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து ஜேர்மனியின் ஹாசா மாநில நிதியமைச்சர் தோமஸ் ஸ்ஹப்ர்  தற்கொலை செய்துள்ளார்.

ஜெர்மனியின் பிரான்க்பெர்ட் மற்றும் மெய்ன்ஸ் நகரங்களுக்கிடையில் ஹொக்கிம் நகரில் உள்ள அதிவேக ரயில் கடவையில் அருகில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட ஓர் ஆணின் சடலம் தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த சடலம் ஹாசா மாநில நிதியமைச்சர் தோமஸ் ஸ்ஹப்ர் என்பதனை உறுதி செய்துள்ளனர்.

மேலும் குறித்த சடலம் அப்பகுதியில் இருப்பதைக் கண்டெடுத்த ஒருவர் குறித்த சடலங்களில் இருந்த காயங்கள் காரணமாக யார் என்பதை அடையாளப்படுத்த முடியவில்லை எனவும் அது குறித்து பொலிஸாருக்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த அமைச்சரின் மரணம் ஓர் தற்கொலை என்பதை உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை, மேலதிக தகவல்கள் எதனையும் உடனடியாக வெளியிட மறுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மாநில நிதியமைச்சர் தனது மரணத்துக்கு முன், தனது குறித்த முடிவுக்கான காரணம் குறித்து எழுதப்பட்ட குறிப்பு ஒன்றை விட்டுச் சென்றுள்ளதாக ஜேர்மனி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தோமஸ் ஸ்ஹஃப்ர் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டியுள்ள அதேவேளை, இந்த நிதி நெருக்கடியினைச் சமாளிக்க மக்களிடம் உதவி கோரியிருந்ததாகவும் அம்மாநில ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.