முக கவசம் மற்றும் கிருமிகளை அழிப்பதற்கான பொருட்களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டத்தை வலுவுடன் முன்னெடுக்கும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் என்ற ரீதியில் இறக்குமதி செய்யப்படும் முக கவசம் மற்றும் இறக்குமதி செய்யப்படும் கிருமியழிப்பு திரவப்பொருட்களுக்காக இதுவரையில் அறவிடப்பட்ட சுங்கவரி மற்றும் ஏனைய வரிகள் (இன்று) 18 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சம்பந்தப்பட்ட இறக்குமதிப் பொருட்கள் விசேட வர்த்தக பொருள் வரி சட்டத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் காரணமாக சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள அதிக கேள்வியை கவனத்தில் கொண்டு நிதி அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.