தற்போது பிரதேச செயலாளர் அலுவலகங்களில் சேவைக்காக சமூகமளித்துள்ள பதிவுசெய்துள்ள பட்டதாரி பயிற்சியாளர்களில் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பம் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு மே மாதம் வரையில் தாமதம்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சின் கோரிக்கைக்கு அமைய கொரோனா வைரசு நோய் தொற்று நிலையை கட்டுப்படுத்துவதில் இவர்களின் ஒத்துழைப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் இந்த காரியாலயங்களுக்கு தற்காலிகமாக இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதினால் இவர்களுக்கு சேவைக்கு சமூகமளிப்பதற்கு சிரமம் என்பதினால் நாளைய (2020.03.30) தினத்தில் சுகாதார வைத்திய அதிகாரி / பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கடமைக்கு சமூகமளிப்பது அத்தியாவசியமல்ல என்பதுடன் இது தொடர்பில் குறிப்பிட்ட காலத்தில் அறிவிக்கப்படும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.