(றிஸ்வான் சாலிஹூ)

தற்போது பாடசாலை விடுமுறை காலமாக இருப்பதால், கல்வி அமைச்சின்  ஈ- தக்சலாவ இணையத்தள கல்விக்கூடத்திற்கு வருகை தந்து பாடசாலை விடுமுறை காலத்தில் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து விடுபடாமல் நேர காலத்தை வீணடிப்பதற்கு பதிலாக கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஈ- தக்சலாவ  பகுதிக்கு நுழையுமாறு கல்வி அமைச்சு  மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கின்றது.

எனவே கல்வி அமைச்சின் www.e-thaksalawa.moe.gov.lk  என்ற இணையதளத்திற்கு நுழைவதன் ஊடாக ஈ-தக்சலாவ கல்விக் கூடம் என்ற பகுதியுடன் இணைப்பை ஏற்படுத்த முனையும்.

சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலமாக  முதலாம் வகுப்பு தொடக்கம் 5 ஆம் வகுப்பு வரைக்கும் 6 வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரைக்குமான பாடப்பரப்புகளும் செயற்பாட்டு பயிற்சிகளும் வினாத்தாள்களும் உட்சேர்க்கப்பட்டுள்ளன. அத்தோடு ஆங்கில மொழிக்குமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.