உலகின் 180இற்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் ஆட்கொண்டுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக பல நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து மக்களை முடக்கியுள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகயை முன்னெடுத்துள்ள நியூசிலாந்து அரசாங்கம், நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

எனினும் குடியிருப்பிற்குச் சொந்தமான வெளிப்பகுதியில் மாத்திரம் வீட்டில் வசிப்பவர்கள் நடமாட அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ள முடியும் என்பதோடு பொது இடங்களுக்கு செல்வது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தில் கொரோனா வைரஸால் இதுவரை 283 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புக்கள் பதிவாகவில்லை.

அத்துடன் நியூஸிலாந்தில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்று உள்ளவர்கள் அடையாளம் காணப்படவில்லை. மேலும் 27 பேர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் 256 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.