வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த நபர் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வேகந்தவள பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.