கொழும்பு பங்குச்சந்தை இன்றும் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள ஊடரங்குச சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் கொழும்பு பங்குச்சந்தை அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

ஆனால் நாளைய தினத்தில் (31) கொழும்பு பங்குச்சந்தையை திறந்து அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதா? இல்லையா என்பது குறித்து இன்று (30) மாலை தீர்மானிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13 ஆம் திகதிக்கு பின்னர் 20 ஆம் திகதி மாத்திரம் கொழும்பு பங்குச்சந்தை திறக்கப்பட்டதாகவும் அதுவம் 2 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அன்று கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பித்தவுடனே விலை சுட்டெண் வீழ்ச்சியடைந்தன் காரணமாக இன்று வரை கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் இரத்துச்செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.