தடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா!

ஆக்கம் : Sajidh Safwan
தொடர் : 05 (இறுதி)


கியூபாவின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்களிப்பு செய்திருப்பது கல்வி. அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமது மக்களை அவர்களின் உணர்வுகளின் போக்கிலும், சிந்தனைப் பயிற்சியிலும் கல்வியூட்டும் நாடே சிறந்த நாடு. கல்வி வளமிக்க நாடு என்றும் வலிமையுடனும், சுதந்திரத்துடனும் திகழும்”, என ஃபிடல் மான்கடா படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலின் காரணமாக, கைதியாக, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, குறிப்பிடுகிறார். இதுவே புரட்சிக்குப் பின் அமலாக்கப் பட்ட துவக்க கட்ட கல்விக் கொள்கையாக இருந்தது. புரட்சி முடிந்த ஒரே ஆண்டில், கியூபா முழு எழுத்தறிவு பெற்ற நாடாக வளர்ச்சி பெற்றது.

கியூபாவிற்கு, எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கான மருந்து கலந்த இறைச்சியை பிரேசில் நாட்டு நிறுவனம் வழங்கி வந்தது. ஆனால் அமெரிக்கா தனது தடை உத்தரவினால், பிரேசிலில் இருந்து இறக்குமதியான இறைச்சியை தடை செய்தது.

இன்றைய கியூபாவோ, தனது சொந்த முயற்சியில் மருத்துவத் துறையில் பெரு வளர்ச்சி கண்டுள்ளது. எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட தாய்க்குப் பிறக்கும் குழந்தைக்கு எய்ட்ஸ் நோயில் இருந்து விடுதலை பெற்றுத் தர தக்க அளவிற்கு, மருத்துவத் துறையில் வளர்ச்சி கண்டுள்ளது.

கியூபா உயிரியல் தொழில் நுட்ப வளர்ச்சியை, முக்கிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப செயல்பாடாக மாற்றிக் கொண்டது. இதன் வெற்றியாக டெங்கு 2 வகையான நோய்க்கு எதிர்வினையாற்றி, பாதிக்கப்பட்டோரை விரைவில் விடுவிக்கும் சாத்தியக் கூறுகளை உருவாக்கியது. நாலாயிரம் கியூப அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். புரதம், ஹார்மோன், ஊசிமருந்து, நோய் கண்டுபிடிப்பு முறை, கலப்பிணங்கள் என பல்வேறு கோணங்களில் தேவையில் இருந்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர், என பத்திரிகையாளர் தோமஸ் ஃபோர்கே கூறுகிறார்.

உலகமே மிரண்டு போயிருந்த எப்போலா வைரஸ்க்கு எதிர் மருந்தைக் கண்டறிந்து, வெற்றிகரமாக செயலாற்றியமைக்காக கியூபாவை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பாராட்டியுள்ளது. ஆயிரம் குழந்தைகளுக்கு 4.5 குழந்தைகள் என்கிற அளவிற்கு இறப்பு விகிதம் கியூபாவில் உள்ளது. அமெரிக்காவில் 6.1 எனவும், இந்தியாவில் 4.9 எனவும் உள்ளது.

நிறைவாக கியூபா தனது புரட்சிக்குப் பின் அடைந்த வெற்றிகளும், தற்போது சோசலிச முகாம் இல்லாத நிலையில் 25 ஆண்டுகளாக எதிர் நீச்சலில் செய்திருக்கும் மகத்தானச் சாதனைகளும், ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்ட உணர்வை, காட்டுத் தீயாக வளர்க்கிறது. வளர்க சோஷலிசம்! வாழ்க கியூபா!

முற்றும்.

உதவிய நூல்கள்:

1. ஃபிடல் காஸ்ட்ரோ உரைகள் – 1997
2. குற்றவாலிக் கூண்டில் வட அமெரிக்கா – 1999
3. குரலின் வலிமை – 2005
4. Cuba The Blockade and The declining Empire – 2005
5. நேருக்கு நேர் – 2002
6. சூறாவளியும் அடிபணியும் – 2006
7. சாவேஸ் – 2006


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.