அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், உயிரிழப்பு 1000ஐ தாண்டி உள்ளது. உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசின் பிடியில் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன.

வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றபோதிலும், கடந்த சில தினங்களாக புதிய நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இறப்பு விகிதமும் பெருமளவில் உயர்ந்து வருகிறது.

நேற்று மட்டும் அமெரிக்காவில் 247 பேர் பலியாகி உள்ளனர்.

இதன்மூலம் பலி எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 13347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் அமெரிக்காவில் மொத்தம் 68 ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.