தேர்தல் முகாமைத்துவ நிறுவனமொன்றினால் மேற்கொள்ளக் கூடிய மிகவும் கடினமான தீர்மானத்தினை இன்றைய தினம் அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அவர்களால் தெரிவிக்கப்பட்ட விதம் தொடர்பில் ஆறுதல் மற்றும் விரக்தியுடனான மனோநிலையில் கவனிக்க முடிந்தது. ஓரளவேனும் சமமான சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொடுத்து வேட்பாளர்களுக்கு நியாயமான வாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு COVID 19 காரணமாக ஏற்பட்டுள்ள பின்னணியில், தேர்தலை ஒத்திவைப்பதே ஒரே தீர்வாகும்  என்பதே ஆறுதல் கொள்ளக் காரணம். 

விரக்தியடையக் காரணம், இந்நாட்டில் அண்மைக்கால விதியாக மாறியிருப்பது தேர்தலை ஒத்திவைப்பது அல்ல. மாறாக உரிய காலப்பகுதியில் தேர்தலை நடாத்த முடியாதிருப்பதேயாகும். புதுக்குடியிருப்பு – கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச சபைகள் இரண்டில் இருந்து இன்றும் நடத்தப்படாதிருக்கின்ற மாகாண சபைத் தேர்தல் வரையிலான பொது விதியே அது. அந்த வகையில் பார்க்கின்ற போது தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்றது என்ற அறிவிப்பினை மேற்கொள்வது ஒரு தடவையல்ல ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சிந்திக்க வேண்டியதென்பது மிகவும் தெளிவாகிறது.
பாராளுமன்ற பொதுத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான எந்தவித அறிகுறியும் இல்லாத சூழ்நிலையில் அதனை நடாத்துதவதற்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்யுமாறு பலர் எம்மைத் தொடர்பு கொண்டும் சந்தித்தும்  தொடர்ச்சியாக முன்வைத்த வேண்டுகோளுக்கமைவாக சீ.எம்.ஈ.வீ. மற்றும் பெப்ரல் ஆகிய அமைப்புக்கள் இரண்டும் மிக நெருக்கடியான தாக்கத்தினை சந்தித்தன.

அவ்வாறு வேண்டுகோள் முன்வைத்தவர்களுள் சிலர் உண்மையாகவநாட்டை நேசிப்பவர்களாக இருந்தனர். இன்னும் சிலர் தமது அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நேரம் காலம் பார்த்திருந்த எமது அரசியல் மற்றும் சிவில் சமூக தோழர்களாவர். அந்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசரம் கொண்டு கருத்துக்களைத் தெரிவித்து சகோதர மக்களை மென்மேலும் கருத்துக் கடலில் தத்தளிக்க வைப்பதற்கு எமது அமைப்புக்கள் இரண்டும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் அதற்கு பதிலாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க அவர்கள் உட்பட ஏனைய பிரதி மற்றும் உதவி ஆணையாளர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடலை மேற்கொள்வதில் ஈடுபட்டோம். 

இறுதியாக தேர்தல் ஆணைக்குழு  ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து எடுக்கப்பட்ட மிகவும் கடினமான அதேவேளை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. இலங்கைப் பிரஜைகள் சற்று வேறுபாடான எண்ணங்களைக் கொண்டவர்கள் என்ற காரணத்தினால் இதுவரையிலும் தேர்தலை ஏன் ஒத்திவைக்கவில்லையென கேட்டவர்கள், அதே பாணியில் “என்ன விசருக்காக ஒத்திவைத்தீர்கள்”  என்று கேட்டாலும் அது புதுமைப்படுவதற்கான வியடமல்ல. தேர்தல் ஆணைக்குழு அந்தளவிற்கு பெயர் பெற்றிருக்கின்ற அதேவேளை விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் முன்னணி ஆணைக்குழுவாகவும் விளங்குகிறது. 
 
தேர்தலை ஒத்திவைக்குமாறு நாமும் அதிகாரபூர்வமாக வேண்டிக் கொண்டோம். ஆயினும் வேட்புமனு தாக்கல் அனைத்தையும் பெற்றுக்கொண்ட மறுகனமே தமது தற்றுணிபான கருத்தை வெளியிட்ட ஆணைக்குழு மீண்டுமொரு தடவை மக்கள் மனங்களை வென்ற பிரஜைகளது கெளரவத்திற்கு ஆளாகும் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. இவ்வனைத்திற்கும் மேலதிகமாக கொரோனா வைரஸ் தொற்று என்பது தடுக்கப்படக்கூடியது என்றும் இன்னும் சில தினங்களில் முறியடிக்கக்கூடிய உலகலாவிய தொற்றுநோய் என்பதையும் தெரிவிப்பதற்கு தலைவர் மறக்கவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் நாட்டு மக்களுக்கான உரையென்பது இதுவேயாகும்.

சிறிது காலத்திற்கு முன்னர் சுகதபால த சில்வா அவர்களால் எழுதப்பட்ட சிறுகதை ஒன்று ‘நாய்கள் சோறு சாப்பிடுகின்றன’ என்ற பெயரில் வெளிவந்தது. சாக்கடை அரசியல் கலாசாரத்தின் படிப்படியான எழுச்சியும் சமூக சீரழிப்பாளர்களின்  செயற்பாடுகள் தொடர்பாகவும் அந்நாவலில் அவர் மிகச் சிறப்பாக விபரித்துள்ளார். அவ்வாறானதொரு பெரும் சேனையையும் தேர்தல் செயற்பாட்டினையும் முகாமைத்துவம் செய்வதான பூதங்களிடம் வேலை வாங்கும் பணியினை ஆற்றுவது பத்துத் தலை இராவணனுக்கும் இலகுவான காரியமாக அமையாது.

அவ்வாறு சிந்திக்கும் தருவாயில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு நாம் இவ்வாறு தெரிவிக்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ் !!(ʾIn shāʾ Allāh)
மஞ்சுள கஜநாயக்க - தேசிய ஒருங்கிணைப்பாளர்  (CMEV)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.