Image may contain: one or more people and people standing

COVID-19 யினால் இலங்கையில் எந்த மரணமும் நிகழக்கூடாது என்று பிரார்த்தித்தவனாக இந்த பதிவை இடுகிறேன்.
By Dr AIA Ziyad Ismail
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணம் நிகழ்ந்தால் இறுதிச் சடங்குகள் எவ்வாறு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மரணங்களை நான்காக பிரிக்கலாம்.
Category 01:-
கொரோனா வைரஸ் தொற்று (COVID-19) உறுதிப்படுத்தப்பட்ட பின் நிகழும் மரணம்.
இறுதிச்சடங்கு நிகழும் முறை.🚫🚷🚯:
 தொடுகையை மட்டுப்படுத்தல்.
 உடலின் வெளியே மருத்துவ பரிசோதனைகள் எதுவும் செய்யாதிருத்தல்
🚷 உடலை மிக நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் வைத்தியசாலையில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மாத்திரம் பார்வையிடல்.
🚫 பிரேத பரிசோதனை மற்றும் மலர்ச்சாலைகளில் நிகழும் பதனிடலுக்கு அனுமதி இல்லை
(No embalming/No Autopsy)
 உடலை Body Bag க்கில் வைத்து Seal பண்ணவேண்டும்.
 உடல் Seal பண்ணப்பட்ட பின்னர் உடலை பார்வையிட அனுமதிக்கப்பட மாட்டாது.
 உடலை பாரம் ஏற்பவர் Seal பண்ணப்பட்ட Bag உடன் சேர்த்து மரண பெட்டியில் (Coffin) கொண்டுசெல்ல வேண்டும். (Coffin ஐயும் Seal பண்ணுவது சிறப்பு என கருதப்படுகிறது.)
 அடக்கம் செய்தல் 24 மணி நேரத்துக்குள் நிகழவேண்டும்.
 உடலை வீடு கொண்டு செல்ல அனுமதி இல்லை.
 அடக்கம் செய்யும் நிகழ்வு அப்பிரதேசத்துக்குரிய போலீஸ் மற்றும் MOH/PHI முன்னிலையில் இடம்பெற வேண்டும்.
Category 2 & 3:
COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்படாத அவதான நிலையில் மரணம் நிகழ்ந்தால் அல்லது Corona தொற்றுக்கான நோய் வரலாறு மற்றும் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் மரணம் நிகழ்ந்தால்:
 உடலின் திரவ மாதிரிகள் COVID-19 சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும்
(Nasal Swab, throat swab, tracheal aspirate, femoral blood sample)
 நிலைமைக்கு ஏற்ப பிரேதபரிசோதனை (Post mortom) செய்யப்படலாம்.
 COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி வேறு காரணங்களால் அல்லது குற்றச்செயலால் (கிரிமினல் நடைமுறையால்) உயிரிழந்தால் பிரேத பரிசோதனை (Post Mortom) செய்யப்பட வேண்டும்.
 Category 4:
COVID-19 அல்லாத நியூமோனியா வால் உயிரிழந்தால் வழமையான இறுதி சடங்குகளை மேற்கொள்ளலாம்.
இலங்கை பிரஜை எவருக்கும் இவ்வாறானதொரு நிலைமை வரக்கூடாது என பிரார்த்திப்போம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.