( ஐ. ஏ. காதிர் கான் )

மினுவாங்கொடை,  நில்பனாகொடை பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த நேபாளம் மற்றும் இந்தியப் பிரைஜகள் 31 பேரைக்  கண்டுபிடித்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரொஹான் மஹேஷின் அறிவுறுத்தலுக்கமைய, இன்று (02) வியாழக்கிழமை குறித்த வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்துத் தேடுதலில் ஈடுபட்டபோது, அங்கு மறைந்திருந்த நேபாளப் பிரைஜைகள் 30 பேரும் இந்தியப் பிரஜை ஒருவர் உட்பட 31 பேரைக் கண்டுபிடித்துள்ளனர்.

   இதனையடுத்து, குறித்த வெளிநாட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வீட்டின் உரிமையாளர் குறித்த வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

   பிற நாடுகளுக்கு தொழிலுக்குச் செல்வதற்கு இலங்கையை இடைத்தங்கல் நிலையமாக இவர்கள் கொண்டிருந்தனர். என்றாலும், அரசாங்க அறிவிப்புக்களை மீறி மறைந்திருந்தமை தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாக, மினுவாங்கொடை பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.