ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனவிழுந்தான் பகுதியில் யானையின் தாக்குதலினால் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றிரவு(31) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கெபிதிகொல்லாவ - அற்றாவ பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹலீம் முகம்மட் அஸ்வர் (29 வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ஆனவிழுந்தான் பிரதான வீதியின் ஊடாக அவரது சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அவரது தோட்டத்திற்கு காவலுக்காக சென்றுகொண்டிருந்தபோது குறுக்கே வந்த யானை தாக்கிய நிலையில் அருகிலுள்ள கபுகொல்லாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது கபுகொல்லாவ பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை ஹொரவபத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.