புத்தளத்தில் கோரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அதனை தடுக்கும் செயற்பாட்டில் முக்கிய வியூகங்களை வகுத்து செயற்பட்ட புத்தளம் நகரபிதா பாயிஸ் கட்டாய ஓய்வில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பாயிஸின் பதவிகள், உதவி நகரபிதா புஸ்பகுமாரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனை வடமேல் மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் உத்தரவாக பிறப்பித்துள்ளார்.

தேர்தல் ஆணையகத்திடம் இருந்து சென்ற அறிவுத்தலுக்கு அமைய, பாயிஸிடமிருந்த அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு புஸ்பகுமாரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பாயிஸ் நகர பிதாவாக இருந்த சில சந்தர்ப்பங்களில், பாராளுமன்றத் தேர்தல்கள் நடந்தன. அப்போதுகூட பாயிஸிடமிருந்து அதிகாரங்கள் பிடுங்கப்படவில்லை. அவர் நகரபிதாவாகவே செயற்பட்டு பாராளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிருந்தார்.

(Jaffna Muslim)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.