கொழும்பில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பிர்தௌஸ் என்ற இளைஞருடைய சடலம், நான்கு நாட்களின் பின்னர் இன்று (09) அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சடலத்தை தகனம் செய்ய முயற்சித்த நிலையில், மீண்டும் பிரேத பரிசோதனை நடாத்துமாறு கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி அஷ்ரப் ரூமி உத்தரவிட்டிருந்ததுக்கு அமைய பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த மரணம் கொரோனா தொற்றினால் ஏற்படவில்லை என, அவரது குடும்பத்தவர்கள் தொடர்ந்து ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையிலேயே பிர்தௌசின் சடலம், இன்று சனிக்கிழமை (09) அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஜனாஸாவை மீட்பதற்காக முன்னாள் மேல் மாகாண அஸாத் சாலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீீீர் ஹாசிம், முஜிபுர் ரஹ்மான், விஜித ஹேரத், சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் முஹீத் ஜீரான், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி உள்ளிட்ட பலர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபரின் சடலம் நான்கு நாட்களின் பின்னர் இன்று அடக்கம் செய்யப்பட்டதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தனது முகப்புத்தக பக்கத்தில் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.