வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 60 தொடக்கம் 61 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது நேற்று நடைபெற்ற அமைச்சரவையின் கூட்டத்தில் வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை இவ்வாறு அதிகரிக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக இருந்த போதிலும் விசேட வைத்தியர்கள் 63 வயது வரை பணியாற்று முடியும் என்று தெரிவித்த அமைச்சர் ,இதேபோன்று ஏனைய அனைத்து தொலில் நுட்ப அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயது தொடர்பாக பரிதுரைகளை வழங்க குழு ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.