இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ரணில் ஜயவர்தன, பிரித்தானியாவின் வர்த்தக விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் பொரிஸ் ஜோன்ஸ், ரணில் ஜயவர்தனவை வர்த்தக விவகார அமைச்சராக நியமித்துள்ளார்.

இதுவரையில் குறித்த வர்த்தக விவகார அமைச்சுப் பதவியை வகித்து வந்த கோனர் பென்ஸ் அந்தப் பதவியை ராஜினாமா செய்ததனைத் தொடர்ந்து ரணில் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு முதல் பிரித்தானியாவின் ஹம்ஷயார் தொகுதியின் கொன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் பதவி வகித்து வருகின்றார்.

கடந்த 2019ம் ஆண்டில் அப்போதைய பிரித்தானிய பிரதமர் திரேசா மே, ரணில் ஜயவர்தனவை தனது வர்த்தக விவகார பிரதிநிதியாக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரணில் ஜயவர்தனவின் தந்தை நலின் ஜயவர்தன 1978ம் ஆண்டு பிரித்தானியாவில் குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஸ்டீபன்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.