தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தில் இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர்.
கேகாலை, வட்டாரம கால்வாயில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் மரணமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நீரில் மூழ்கிய குறித்த நபரை, பிரதேசவாசிகள் மீட்டு பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்தவர் 48 வயதான, பெயாபீல்ட், இம்புல்கஸ்தெனிய எனும் இடத்தைச் சேர்ந்தவராவார்.
இதேவேளை, கேகாலை, வல்தெனிய பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 65 வயதான பெண் ஒருவர் அதற்குள் சிக்கி மரணமடைந்துள்ளார்.
தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, காலி, மாத்தறை, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கொழும்பு, கண்டி, குருணாகல் மாவட்டங்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(தினகரன்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.