ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்களையும் விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுக்கள் மீதான விவாதம், எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி முதல்ஆரம்பிக்க உயர்நீதிமன்றம் இன்று (12) தீர்மானித்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் விசேட பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியலால் தசநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பிரதம நீதியரசர் தலைமையிலான 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இதற்கு முன்னர் இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டடிருந்தது.
இந்த நிலையில், புவனேக அளுவிஹாரே, எஸ். துரைரராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று (12) இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அதற்கமைய இந்த மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் விவாதங்களை நடத்துவதற்கு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்தது.
எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதிக்கு முன்னர் எழுத்துமூல சமர்ப்பணங்களை அனைத்து தரப்பினரும் மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதியரசர்கள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.