(அஷ்ரப் ஏ சமத்)

மாளிகாவத்தை நிலைமை பற்றி 3 வாரங்களுக்கு முன்பே  அங்கு சென்று நேரடியாக மக்கள் படும் அவதிகளை கண்டேன்.  அப்பிரதேசம்  இறுக்கமானதும் முடுக்கு  குடியிருப்புக்கள்,நிறையவே உள்ளன. 

மாளிகாவத்தை வீதிகளிலும் இரு மருங்குகளிலும் சிறிய கடைகள், பாதையோர வியாபாரம். ஒரு தொடா்மாடியில் 2 அல்லது குடும்பங்கள் குடிவாழ்கின்றனா், இளைஞா்கள் தொழில் செய்வோா், சில போதைப் பொருள் பாவனையாளா்களை பாதைகளில் காணக்கூடியதாக உள்ளது.

சகல இனங்களும் கலந்து வாழ்கின்றனா். சில  பெண்கள் அபான்ஸ் கிளினீங் தொழில் செய்து ஒரு நாளைக்கு 800 சம்பளம் பெறுவதாகச் சொன்னாா்கள் கடந்த லொக் டவுன் காரமாக 1 மாதமாக தொழில் இல்லை என பல தாய் மாா்கள் கூறினாா்கள். 

பல குடும்பங்களின்  குடும்பத் தலைவா்கள் தொழியின்மை  போன்ற பல்வேறு பிரசசினைகள் அங்கு  உள்ளன. கடந்த 3 வாரங்களுக்கு முன்   1500 பெருமதியான உலா் உணவுப் பாா்சல் வழங்கிய அன்வா் பாய் கூட  5 பொலிஸாரை வரவழைத்து அவா்கள் முன்  மக்களை  வரிசையாக நிற்க வைத்து 3 தொண்டா்கள் ஊடாக உலா் உணவு  காட் வழங்கி உணவுப் பொதிகளை வழங்கினாா் அந் நேரத்திலும்  நுாற்றுக்கணக்கானோா் காா்ட் இல்லாமல் வந்தவா்களை அந்த அன்வா் பாய் தரமுடியாது.

  நாங்கள் 300 காா்ட் வழங்கினோம் பொருட்கள் முடிந்து விட்டது எனச்  கூறி  அந்த தாய்மாா்களை திரும்ப வீடுகளுக்கு அனுப்பினாா். இந்த பாய் முறையாக பொலிஸ் அனுமதி பெற்று அவா்களை வரவழைத்து முறையாக தமது உதவிகளை செய்திருந்தாா். இதே போன்று இன்று பணம் வழங்கிய தனவந்தா்  பின்பற்றியிருந்தால்  இன்று 4 உயிா்கள் பிரிந்திருக்காது .

 ஸக்காத் வழங்கும் இஸ்லாமிய முறை இங்கு பின்பற்றப்படவில்லை. எப்படியிருந்தும் பணம்படைத்தவா் வருடா வருடம் இவ்வாறு தொடா்ந்து நோன்பு காலத்தில் பணம் வழங்குவதாகவும் சொல்லப்பட்டது.

இருந்தும் இன்றைய கொரோனா காலகட்டத்தில் அவர் நாட்டின் சட்ட திட்டத்தினை பின்பற்றியிருந்தால் இந் அனா்த்தம் நடைபெற்றிருக்காது நல் உள்ளம் படைத்தவா் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளாா். நல்லது செய்யப்போகி அவா் கஸ்டத்தில் மாட்டிக் கொண்டாா்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.