அரசாங்கம், பலவந்தமாக அரச ஊழியர்களின் சம்பளத்தில் கைவைப்பதாக கூறி இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக மேற்படி முறைப்பாட்டினை தாம் மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளதாக இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் செயலாளரும், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கொரோனா நிதியத்திற்காக என்று கூறி அரச ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அரச நிறுவனங்களின் தலைவர்கள் அமைதி காத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறு இருந்த போதிலும், தாபன சட்டம் மற்றும் நிதி சட்டங்களுக்கு அமைவாக அரச ஊழியர்களின் விருப்பமின்றி அவர்களது சம்பளத்தில் எவ்வித குறைப்பும் செய்ய முடியாது என்றும் மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.