18/5/2020 அன்று இறையடி சேர்ந்த கஹட்டோவிட்ட மர்ஹூம் ஸாலிஹ் ஆசிரியரின் நினைவாக....
             ***********************
'என்றென்றும் 'ஜென்னத்தில்' நிலைத்து விடு'
             #############
   நெஞ்சில் நிறைந்த குணத்தின் குன்றாய்
    எங்கள் இதயத்தில் எத்தனையோ ராகங்கள்
    மாணவ வாழ்வுக்காய் (நீ) உதிர்த்த கீதங்கள்
   என்றும் நிலைக்கும் உம் மண்ணறை வாழ்வில்
                           *********
    கஹட்டோவிட்டாவின் சிரேஷ்ட பிரஜையே
   சாந்த உருவே 'ஸாலிஹ்' ஆசானே..!
    ஊசியினைக் காந்தமிங்கு கவர்தல் போலே
     உத்தமர்கள் ஏடுகளில் ஒட்டிக் கொண்டாய்...!
                          **********
   
     தூசிக்கும் பெறாரென்று தூற்றப்படுவோர்
    யாசித்துக் கூசிப்போய் வாழ்வோர் முன்னே..
    நேசிக்கும் நேசனாய் வாழ்ந்து காட்டி
    நேசனின் அழைப்பினில் சென்றுவிட்டாய்...!
                           ***********

          உண்பதுவும்,குடிப்பதுவும்,உறங்குவது மாக
ஒருவீடு கட்டி மணம் முடிப்பதுமாக
எண்பதுவாம் வயது வரை வாழ்ந்திட்டோர் முன்
என்னருசி வாழ்க்கை என்று காட்டி நின்றாய்...!
                         **************
   வாசிப்பை நேசித்தாய் அதனால் ஒரு
ஆசிப்பைப் பெரியோரால் பெற்றுணர்ந்தாய்..
'காசிப்பை'  நிறைவதிலே கண்ணாயிருக்கும்
கல்விக்கு(tution) சாவுமணி கட்டிச் சென்றாய்....!
                         **************
இன்ப துன்ப மிரண்டினையும் ஏற்று வாழ்வில்
எது நன்மை எது தீது (என்று) புரிய வைத்தாய்..!
அரசியலை,பொருளியலை,அறிவியலை மற்றும்
ஆய கலை அத்தனையும் தெரிந்து வைத்தாய்...!
                          *************
இரப்போனும், இருப்போனும் இனமே கண்டு
இல்லார்க்கு மனமுவந்து ஈர்ந்து நின்றாய்..
என் இதயங் கவர்ந்த ஒரு 'ஸாலிஹ்' நீ..
என்றென்றும் 'ஜென்னத்தில்' நிலையாய் வாழு...!  ஆமீன்...

  காவூர் ஜமால்....

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.