நேற்றைய தினம் (2020.05.24) இலங்கைக்கு வரும் எதிர்பார்ப்புடன் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களை மீண்டும் அழைத்து வரும் வேலைத்திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பொன்று கௌரவ உயர் கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் காண்டீபன் பாலசுப்பிரமணியம் அவர்கள், வெளி நாட்டு அலுவல்கள் வெளி நாட்டு தொடர்புகள் அமைச்சின் இலங்கை மாணவர்கள் தொடர்பில் செயற்படும் திருமதி.அஞ்சூல் ஜான் , பதில் பணிப்பாளர் நாயகம் ருவந்தி எல்பிட்டிய, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் சந்திரசேகர அவர்கள், வெளிநாட்டு சேவை அதிகார சபையின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தெரிவிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு:
• 26 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும் , இவர்களில் வெளிநாட்டு பணியாளர்களாக சுமார் 16இலட்சம் பேர் இருக்கின்றனர் என்பதும்
• இதுவரையில் இலங்கைக்கு வருவதற்காக சுமார் 41 000 பேர் பதிவு செய்திருப்பதாகவும், இவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் பொழுது கீழ்கண்ட வரையறைக்கு அமைவாக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும்,

       1 .மாணவர்கள்
       2. .வெளிநாட்டில் உள்ள அரச ஊழியர்கள்
       3. .குறுகிய கால விசா அடிப்படையில் இருப்போர்
       4.. மனிதாபிமான அடிப்படையில்
       5.. தொழில் வாய்ப்பை இழந்திருப்போர்
• இலங்கையில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்காக வெளி நாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதும்
• இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதுடன் ஒருமுறை வெளிநாட்டில் இருப்போரை அழைத்து வருவது சிரமமாவதுடன் அதனை முறையாக மேற்கொள்ளப்படும் என்பதும்
• தூதரக அலுவலக மட்டத்தில் விசேட தொலைபேசி தொடர்புகளை ஏற்படுத்தி அந்தந்த நாடுகளில் உள்ள நபர்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் இதன் போது அடையாளங் காணப்பட்ட சுகாதார வசதி, உணவு, தங்குமிடம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தல்
• https://www.contactsrilanka.mfa.gov.lk/ என்ற இணையதளத்துடன்; இவர்களை தொடர்புபடுத்தி தேவையான அறிவுறுத்தல்களை வழங்குதல்
• வெளி நாடுகளில் உள்ள பணியாளர்களில் இலங்கைக்கு பணத்தை அனுப்புவதற்கு முடியாமையினால் இலங்கையிலுள்ள அவர்களது குடும்பத்திற்காக நிவாரணத்தை வழங்குவதற்காக 50 மில்லியன் ரூபா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும்
• வெளி நாடுகளிலுள்ள இலங்கையர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்பதும்
• இலங்கை காப்புறுதி நிறுவனத்துடன் தற்போதைய வைரசு தொற்றின் போது வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கக்ககூடிய காப்புறுதி கொடுப்பனவு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடப்பட்டது.
- அரசாங்க தகவல் திணைக்களம் -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.