அனைத்து பிரஜைகளினதும் தனிப்பட்ட தகவல்களை வாழ்நாளில் ஒரே முறை பெற்றுக்கொண்டு வழங்கப்படவுள்ள பயோ-மெட்ரிக் டிஜிட்டல் அடையாள அட்டைகளின் தற்போதைய நிலை பற்றி ஆராயும் கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.


ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது பயோ-மெட்ரிக் டிஜிடல் அடையாள அட்டைகளின் தேவை குறித்து முன்மொழியப்பட்டிருந்தது. அதன் ஆரம்ப திட்டம் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
புதிய அடையாள அட்டைகளை தயாரிக்கும் பணி நிபுணர் குழுவொன்றின் கீழ் தகவல், தொழிநுட்ப நிறுவனத்தின் முழுமையான வழிகாட்டலின் கீழும் ஜனாதிபதி செயலணியொன்றின் கண்காணிப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.