திஹாரியைச் சேர்ந்த ஹம்தான் பின் இக்ராம் என்ற மாணவர் Automatic two in one machine தன்னியக்க தண்ணீர் குழாய் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

குறித்த மாணவன் முஹம்மது ஷரீப் முஹம்மத் இக்ராம் மற்றும் ஆசிரியை ஸம்ஸத் ஆகியோரின் புதல்வனாவார். இவர் ஆரம்பக்கல்வியை திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் (சாதாரண தரம் வரை) கற்றுள்ளதுடன், உயர் கல்விக்காக கண்டியில் தனியார் வகுப்புக்களுக்கு சென்று கொண்டிருந்தார். நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக தனக்குக் கிடைத்த நேரங்களை பிரயோசனம் மிக்க ஒன்றுக்காக பயன்படுத்தியுள்ளார்.

ஆம்! அதன் பெறுபெறாக ஹம்தான் ஆர்டினோ தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இக்குழாயை கண்டுபிடுத்துள்ளார். இக் குழாய் பற்றி ஹம்தான் பின்வருமாறு கூறுகிறார்.

"தற்போதைய கொரோனா தொற்று பரவும் காலத்தில் அடிக்கடி கைகழுவும் படி காதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு ஒரு தீர்வாகவே பெற்றோரின் ஆலோசனையுடன் இதனை அமைத்தேன். இது இரண்டு குழாய்களை கொண்டது
1. தண்ணீர் குழாய் 2. சவர்க்கார நீர்க்குழாய், கருவியை தொடாமலே கைகளை அருகே கொண்டு போகும் போது நீரோ, சவர்க்கார நீரோ தானாக வருவது இவ் இயந்திரத்தின் சிறப்பியல்பாகும்."


 மேலும் இம் மாணவன் இதற்கு முன்னரும் பல விடயங்களை கண்டுபிடித்துள்ளார். இவர் 7ம் தரத்தில் கற்கும் போது கண்டுபிடித்த ஸம்சா பட்டி தயாரிக்கும் இயந்திரம் களனிப் பல்கலைக்கழகம் மற்றும் SLIT இணைந்து நடாத்திய போட்டியில் அகில லங்கை ரீதியில் மெரிட் சித்தி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தரம் 11ல் (Fish Feeder) மீனுக்கு தானாக உணவு வழங்கும் இயந்திரம், கடவுச்சொல் மூலம் இயங்கும் Automatic Door Lock, Plotter எனும் ஒரே கையொப்பமிடும் Printer போன்றவற்றையும் ஹம்தான்  கண்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.