தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் பொது மக்களை தவறாக வழி நடத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இராணுவ மற்றும் பொலிஸாரின் உதவியை நாடியதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பு எவ்விதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மீண்டும் வலியுறுத்தினார்.
கருத்துரையிடுக