(எம்.எப்.எம்.பஸீர்)

பெற்றோரின் பொறுப்பிலிலிருந்த மூன்று சிறுவர்களை தாம்
சி.ஐ.டி.யினர் எனக் கூறி அழைத்துச் சென்று அச்சுறுத்தி ஆவணங்களில் பலாத்காரமாக கையெழுத்துப் பெற்றதாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த மூன்று சிறுவர்களையும் மனுதாரர்களாக கொண்ட இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், அவர்களது பெற்றோர் கையெழுத்திட்டுள்ள நிலையில், மனுவானது சட்டத்தரணி பிரபுத்திகா திசேராவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இம்மனுவில் பிரதிவாதிகளாக, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர் டப்ளியூ. திலகரத்ன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

புதத்ளம் கரைத்தீவு அல் சுஹைரியா அரபுக் கலூரியில் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டதா, அங்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டதா என சி.ஐ.டி. எனக் கூறிக் கொண்ட குழுவினர் தம்மிடம் விசாரணை நடத்தியதாகவும், தாம் கல்வி கற்ற காலப்பகுதியில் அவ்வாறு ஒன்றும் இடம்பெறவில்லை என பதிலளித்தபோது, தம்மை அச்சுறுத்தி பலாத்காரமாக அவர்கள் சில தாள்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டதாகவும் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் மனுதாரர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.