நூருல் ஹுதா உமர்

தொடர் ஊரடங்கு சட்டம் அமுலாகும் போது அடுத்த நாள் உணவுக்கு என்ன செய்வது என்பதை பற்றி மக்கள் சிந்திக்கும் போது தேர்தல் இக்காலத்தில் முக்கியமான ஒன்றல்ல என தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

அண்மையில் இந்த நாடு ஒரு தேர்தலை எதிர்நோக்கி மக்கள் அமோகமாக வாக்களித்து ஒரு ஜனாதிபதியை தேர்தெடுத்துள்ளார்கள். பின்னர் ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தல் ஒன்றை நோக்கி நகர முன்னர் வாக்களித்த மக்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டியது கடமையாக இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற கட்சி பிரதானிகள் கூட்டம் தொடர்பில் கிழக்கு வாசலில் நடைபெற்ற அரசியல் சார் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,
தேர்தல் திகதி, பாராளுமன்ற அமர்வு திகதி என்பன அறிவிக்கப்பட்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இந்த காலப்பகுதி அமைந்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரினால் கூட்டப்பட்ட கட்சி பிரதானிகள் கூட்டத்தில் நாங்கள் இதுவிடயமாக பேச வேண்டிய நிலை வந்தது.

சில அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் சில அரசியல் கட்சிகள் தேர்தலை பிற்போட வேண்டும் என்றும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். சிலர் அரசின் நிவாரணங்களை பற்றி பேசினர். அப்போது நாங்கள் நாட்டு மக்களின் தேவைகளையும் நாட்டின் நிலையையும் தெளிவாக அங்கு முன்வைத்தோம்.

நாட்டு மக்கள்தான் இறைமை உடையவர்கள். இறையாண்மை உடையவர்கள் மக்கள். மக்களுக்காகவே தான் தேர்தல், பாராளுமன்றம், அரசியல், தேர்தல் ஆணையம் எல்லாமே.

இப்போதைய சூழ்நிலையில் மக்கள் தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள தயாராக இல்லை.

மக்கள் கொரோனா அச்சத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறார்கள். 21 நாட்கள் தனிப்படுத்தப்படுவோமோ அல்லது இறந்து விடுவோமோ என மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள்.

தொடர் ஊரடங்கு சட்டம் அமுலாகும் போது அடுத்த நாள் உணவுக்கு என்ன செய்வது என்பதை பற்றி மக்கள் சிந்திக்கும் போது தேர்தல் இக்காலத்தில் முக்கியமான ஒன்றல்ல. அண்மையில் இந்த நாடு ஒரு தேர்தலை எதிர்நோக்கி மக்கள் அமோகமாக வாக்களித்து ஒரு ஜனாதிபதியை தேர்தெடுத்துள்ளார்கள்.
பின்னர் ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தல் ஒன்றை நோக்கி நகர முன்னர் வாக்களித்த மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. இப்போது இருக்கின்ற தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கடந்த கால தீர்மானங்களும், அவரின் செயற்பாடுகளும் எங்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது.

ஆணைக்குழுவில் இருப்போர் எந்த கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களை நம்புகிறோம். அதே போன்று நீதிமன்றங்களையும் நாங்கள் நம்புகிறோம். இனங்களினதும், அரசியல் கட்சிகளினதும் அபிலாஷைகளுக்கு அப்பால் நாட்டுக்கு தேவையான நல்ல விடயம் எது தேவையோ அதை நாங்கள் சரியாக ஒழுங்குபடுத்தி செய்ய விரும்புகிறோம்.

ஆனால் தேர்தல் நடைபெற இரண்டு மூன்று மாதங்கள் கடந்து விடுமோ அல்லது நாங்கள் ஓய்வுபெற முன்னர் தேர்தல் நடந்து விடுமோ என இப்போது சிலர் பேசுகிறார்கள். ஜனாதிபதி பொதுத் தேர்தலை பிரகடனம் செய்த போதே கொரோனா விவகாரமும் பிரகடனம் செய்யப்படுகிறது.
மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பிழையான காரியமாக வேட்புமனுத்தாக்களை நீங்கள் கோரினீர்கள். இன்று கொரோனா இருப்பது போன்றுதான் அன்றும் கொரோனா இருந்தது.

வேட்புமனுத்தாக்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் இறுதியம்சத்தையாவது தள்ளிவைத்திருக்க வேண்டும்.

நீங்கள் அதனை தள்ளிவைக்காததனால் ஏற்பட்ட குறைபாடுகள் ஏராளம் இருக்கிறது. அதை நான் இங்கு விளக்கவரவில்லை வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும். அதற்கான அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது என்று நான் அங்கு கூறினேன்" என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.