கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 23 மாவட்டங்களில் இன்று (11) காலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து பஸ்களில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே காணப்பட்டனர்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த போதிலும் நிறுவன செயற்பாடுகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளன.ad318440c663ad9090b5a626448fedcc L 1
இதனைத்தொடர்ந்து கொழும்பு மற்றும் அதனையடுத்துள்ள பகுதிகளில் இன்று காலை வாகன நெரிசல் காணப்பட்டது. தனியார் வாகனங்களே இவ்வாறு காணப்பட்டன
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த போதிலும் அத்தியாவசிய பொதுமக்கள் சேவையை வழங்கும் பொழுது உணவு பொருள் மற்றும் பொருள் விற்பனையை மேற்கொள்ளும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் மருந்தகங்கள் பலசரக்கு , தொலைபேசி விற்பனை நிலையங்கள், புடவை விற்பனை நிலையங்கள், புத்தகம் மற்றும் பத்திரிகை விற்பனை நிலையங்கள் மற்றும் அதிஷ்ட இலாபசீட்டு விற்பனை கூடங்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.
மேலே குறிப்பிட்ட வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும் இந்த வர்த்தக நிலையங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வது தாம் பதிவைக்கொண்டுள்ள அல்லது தங்குமிடத்தைக் கொண்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் அல்லது சேவையை வழங்கும் நிலையத்தில் மாத்திரமாகும் என்றும் சுட்டிக்காட்டபட்டுள்ளது.
பொதுமக்களின் தேவைக்காக வெளியில் செல்வதற்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரதை பெற்றுள்ள தனியார் வாகனம் மணித்தியாலம் 10.30 இற்கும் மணித்தியாலம் 15.00 இற்கு இடையிலான காலப்பகுதியில் மாத்திரம் பயணிப்பதற்கான அனுமதி வழங்க்கபடும் .இருப்பினும் இதற்கமைவாக வீட்டிற்கு வெளியே தனியான நடவடிக்கைகளுக்காக செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை முன்னெடுத்தல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் , அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் அல்லது மருந்து வகைகளை கொள்வனவு செய்தல் போன்;ற தனிப்பட்ட தேவைகளுக்காக அவசரகால அனுமதிப்பத்திரமின்றி வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கத்திற்கு அமைவாகவே ஆகும். இதற்கமைவாக 1,2 இலக்கங்களைக்கொண்டவர்கள் திங்கட்கிழமைகளிலும் , 3,4 செவ்வாய்க்கிழமைகளிலும், 5,6 புதன்கிழமைகளிலும், 7,8 வியாழக்கிழமைகளிலும் மற்றும் 9,0 சனிக்கிழமைகளிலும் ஆகும். இருப்பினும் தனிமைப்படுத்தலுக்கு / சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் சான்றிதழ் கிடைக்கும் வரையில் மேற்குறிப்பிட்ட வகையில் பயணிக்க முடியாது.
சிறிய உணவகங்கள், உணவை வழங்கும் சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் ரெஸ்டுரண்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. அத்தோடு இவற்றை திறப்பது தொடர்பில் காலத்திற்கு அமைவாக எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ளப்படும்.
தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவு விநியோகம் (Delivery Service ) சேவை நிறுவனத்திற்காக தொடர்ந்தும் செயலபட முடியும்.
சுப்பர் மார்க்கட்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு முடிவதுடன் இதில் சம்பந்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்தல் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பொறுப்பாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
இதேவேளை, , கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 23 மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 23 மாவட்டங்களில் இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

- அரசாங்க தகவல் திணைக்களம் -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.