முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர, புற்று நோயாளிகளுக்கு விக் தயாரிப்பதற்காக தனது தலை முடியை வழங்கியுள்ளார்.

பெண் புற்று நோயாளிகளுக்கு இவ்வாறு தலை முடியைக் கொண்டு விக் தயாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புற்று நோயானது நோயாளிக்கு மட்டுமன்றி அவரது குடும்பத்தினருக்கும் அன்பிற்குரிய அனைவருக்கும் மிகவும் வேதனையை ஏற்படுத்தும் எனவும் அவர்களின் வலி வேதனை போக்க முடியாவிட்டாலும் ஏதேனும் ஓர் வகையில் உதவ முடியும் எனவும் ஹிருனிகா தெரிவித்துள்ளார்.

எனவே தாம் தனது தலை முடியை, புற்று நோயாளிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானித்ததாகத் தெரிவித்துள்ளார்.

தங்களது தலை முடியை வெட்டும் யுவதிகள் அவற்றை வீசி எறியாது, இவ்வாறு புற்று நோயாளிகளுக்கு வழங்கினால் அது பயனுள்ளதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிருனிகா தனது முகநூலில் இது தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Tamilwin.com)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.